டமால் டுமீல்.. பொளந்துகட்டபோகுது மழை! 9 மாவட்டங்களில் இன்று சம்பவம் - சென்னை மக்களும் ரெடியா இருங்க.
சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
06.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
07.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
08.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
09.09.2023 & 10.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): திருப்போரூர் (செங்கல்பட்டு) 9, தேவாலா (நீலகிரி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), செங்கல்பட்டு தலா 8,கூடலூர் பஜார் (நீலகிரி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), மேல் கூடலூர் (நீலகிரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), காஞ்சிபுரம் தலா 7, பிஏஎஸ்எல் மணம்பூண்டி (விழுப்புரம்), KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), நாலுமுக்கு (திருநெல்வேலி), டிஜிபி அலுவலகம் (சென்னை) தலா 6, ஆர்எஸ்சிஎல்-2 கேதார் (விழுப்புரம்), திருவாடானை (ராமநாதபுரம்), பெரியார் (தேனி), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), மரக்காணம் (விழுப்புரம்), கல்லிக்குடி (மதுரை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), VIT சென்னை AWS (செங்கல்பட்டு) தலா 5, திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), பிஏஎஸ்எல் முகையூர் (விழுப்புரம்), தம்மம்பட்டி (சேலம்), சங்கரிதுர்கம் (சேலம்), பார்வூட் (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), குழித்துறை (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி), தொண்டி (ராமநாதபுரம்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஐஸ்ஹவுஸ் (சென்னை), உத்தண்டி (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை) தலா 4, ஆர்எஸ்சிஎல்-2 சூரப்பட்டு (விழுப்புரம்), எடப்பாடி (சேலம்), ஆவடி (திருவள்ளூர்), மேட்டூர் (சேலம்), மாதம்பூண்டி (கள்ளக்குறிச்சி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), வானூர் (விழுப்புரம்), தூத்துக்குடி, கோவிலங்குளம் (விருதுநகர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), திருப்புவனம் (சிவகங்கை), அம்பத்தூர் (திருவள்ளூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), சேந்தமங்கலம் (நாமக்கல்), திருச்சி விமான நிலையம், சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), தாம்பரம் (செங்கல்பட்டு), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), திருவள்ளூர், அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), பவானி (ஈரோடு), திருவொற்றியூர் (சென்னை), மணலி (சென்னை), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), NIOT சென்னை (சென்னை), YMCA நந்தனம் (சென்னை) தலா 3, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), இரணியல் (கன்னியாகுமரி), திருத்தணி (திருவள்ளூர்), ஹரிசன் மலையாள லிமிடெட்(நீலகிரி), உசிலம்பட்டி (மதுரை), காரியாபட்டி (விருதுநகர்), ஈரோடு, பாபநாசம் (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி), தொண்டையார்பேட்டை (சென்னை), ஆர்எஸ்சிஎல்-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி) , தலைவாசல் (சேலம்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), குண்டர் அணை (தென்காசி), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), அம்மாபேட்டை (ஈரோடு), புத்தன் அணை (கன்னியாகுமரி), சின்கோனா (கோயம்புத்தூர்), எம்.ஜி.ஆர்.நகர் (சென்னை), அவலாஞ்சி (நீலகிரி), திருச்சுழி (விருதுநகர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), பெருங்குடி (சென்னை), அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), வளசரவாக்கம் (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை) தலா 2, திற்பரப்பு (கன்னியாகுமரி), ஆயிக்குடி (தென்காசி), சத்தியமங்கலம் (ஈரோடு), கொடைக்கானல் (திண்டுக்கல்), ஆர்எஸ்சிஎல்-2 கஞ்சனூர் (விழுப்புரம்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), வால்பாறை PAP (கோவை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), மானாமதுரை (சிவகங்கை), நம்பியூர் (ஈரோடு), ராமநதி அணை (தென்காசி), புழல் ARG (திருவள்ளூர்), சேர்வலர் அணை (திருநெல்வேலி), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), சித்தார் (கன்னியாகுமரி), சென்னை விமான நிலையம், ஆலந்தூர் (சென்னை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), பொன்னேரி (திருவள்ளூர்), ஆத்தூர் (சேலம்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), சென்னை நுங்கம்பாக்கம், கடவனூர் (கள்ளக்குறிச்சி), விழுப்புரம், தென்காசி, திருவாலங்காடு (திருவள்ளூர்), டேனிஷ்பேட்டை (சேலம்), திருத்தணி PTO (திருவள்ளூர்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), செங்கோட்டை (தென்காசி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), புடலூர் (தஞ்சாவூர்), கொடிவேரி (ஈரோடு), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), விருதுநகர் AWS, களியல் (கன்னியாகுமரி), வொர்த் எஸ்டேட் சேர் (நீலகிரி), கவுந்தப்பாடி (ஈரோடு), சூரங்குடி (தூத்துக்குடி), பூதபாண்டி (கன்னியாகுமரி), பரமக்குடி (ராமநாதபுரம்), சிவலோகம் (கன்னியாகுமரி), ஆர்எஸ்சிஎல்-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), குளச்சல் (கன்னியாகுமரி), திருர் KVK AWS (திருவள்ளூர்), சந்தியூர் KVK AWS (சேலம்), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
05.09.2023 முதல் 07.09.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் இன்று தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
05.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
06.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
07.09.2023 & 07.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications