இந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்
Recommended Video

சென்னை: தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நல்ல மழை பெய்தது. நேற்றும் பல இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலைமையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், "தமிழகத்தில் பல இடங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவுகிறது. இதனால் வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி இருக்கிறது. இது வங்கக் கடல் மற்றும் குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டுஇருப்பதால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
வெப்ப சலனம் தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, , திருச்சி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருவாரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடடும்- வட மாவட்டங்களை பொறுத்தவரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்றார்கள்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications