குட் நியூஸ்.. தமிழகத்தில் நேற்று முடிந்த கத்தரி வெயில்.. நாளை முதல் கொட்டிதீர்கக போகும் கனமழை
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்குத் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள பரவலான பகுதிகளில் இடியுடன் கூடி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக்காலங்களில் வெயில் வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் நேற்றுடன் முடிந்தது. நேற்று மட்டும் சுமார் 13 இடங்களில் வெப்பம் சதத்தைத் தொட்டது.

இந்நிலையில், வெயிலால் துவண்டு போயிருக்கும் மக்களைக் குளிர்விக்கும் வகையில் அடுத்த நான்கு நாட்களுக்குத் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழையுடன் 30-40 கிமீ வேகத்தில் சூரைக்காற்றும் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல அடுத்த 2 நாட்களுக்கு மதுரை, திருச்சி, சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications