அடுத்த 3 மணி நேரத்திற்கு.. இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம் உட்பட ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே கோடைக் காலம் மக்களை வாட்டி வதைத்தது. பல இடங்களில் வெப்பநிலையும் சதமடித்தது. இதனால் மக்கள் பெரும் இன்னலை எதிர்கொண்டனர்.

இந்த மாத தொடக்கத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது. அதைத் தொடர்ந்து மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது பொதுமக்களைக் குஷியில் ஆழ்த்தியுள்ளது. இன்று மாலை சென்னை, போரூர், மாங்காடு பகுதியில் நல்ல மழை பெய்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வரும் நாட்களில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications