இன்றும் நாளையும் அதி கனமழை.. சென்னைக்கு ரெட் அலர்ட்.. அடுத்தடுத்த வானிலை மாற்றங்கள்
சென்னை: சென்னையில் மிக அதிக கனமழை பெய்யக் கூடும் என்பதால் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில் ,நேற்று தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தெற்குவங்கக் கடலில் மத்திய பகுதியில் நிலவுகிறது.
இது அடுத்த வரும் 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். மேற்கு , வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வடதமிழக கடற்கரையையொட்டி நிலவக் கூடும். பின்னர் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம் புதுவை கடற்கரை பகுதியில் காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே கடலூருக்கு அருகில் நாளை மாலை கரையை கடக்கும்.

புதுவை
இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தரை காற்று மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் நாளை காலை முதல் வீசும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்று்ம புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. இதில் அதி கனமழை 5 இடங்களிலும் மிக கனமழை 21 இடங்களிலும் கனமழை 40 இடங்களிலும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம், திருப்பூண்டி தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

திருச்சி
இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், கள்ளக்குறிச்சி,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும், கோவை, தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் கநமழையும் பெய்யும்.

மிக பலத்த மழை
11 ஆம் தேதி அன்று திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு, தருமபுரி, ஈரோடு , கிருஷ்ணகிரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும்.
Recommended Video

மிக பலத்த மழை
சென்னைக்கு இன்றும் நாளையும் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யக் கூடும். அக்டோபர் முதல் தற்போது வரை தமிழகத்தில் 51 சதவீதம் மழை பெய்துள்ளது. இயல்பாக பெய்ய வேண்டிய 25 செமீட்டரை விட 51 சதவீதம் அதிகமாக 39 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) அதி பலத்த மழையை தரும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும்
இதன்படி இந்த மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பெய்யும். கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரில் இன்னும் 3 நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்யும். இன்று பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யும். நாளை (11-ந்தேதி) சில பகுதிகளில் அதி பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications