திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 7 மாவட்டங்களில் இன்று செம மழைக்கு வாய்ப்பு.. என்ஜாய் செய்ங்க மக்களே!
சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் இரவு நேரங்களிலும் அதிகாலையிலும் மழை பெய்து வந்தது.
இது வெப்பச்சலனத்தாலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இந்த மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

லேசான தூறல்
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு சென்னையில் பலத்த காற்றுடன் 15 நிமடங்களுக்கு அடிஅடியென மழை வெளுத்தது. இதைத் தொடர்ந்து 3 தினங்களாக சென்னையில் மழையில்லை. ஆனால் இன்று அதிகாலை முகப்பேர், அண்ணாநகர், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தற்போதும் லேசான தூறல் இருக்கிறது.

திருவள்ளூர்
இந்த நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய கனமழை
அதாவது தேனி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

வானம் மேகமூட்டம்
சென்னையை பொருத்தவை அடுத்த 2 தினங்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். இன்றும், நாளையும் குமரிக்கடல், மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கர்நாடகம், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். 23-ஆம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications