மோச்சா போச்சு! இந்த 5 நாள்தான் முக்கியம்.. தமிழகத்தில் வெப்பம் உயரும்! heat stress ஏற்பட வாய்ப்பு!
சென்னை: தமிழகத்தில் வெப்பநிலை மேலும் 2 முதல் 3 டிகிரி அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கத்தரி வெயில் காலம் வரும் 28 ஆம் தேதி முடிவடையும் நிலையில் மேலும் வெயில் அதிகரிக்கும் என அறிவுறுத்தலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த அதி தீவிர மோகா புயல், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்தது. இன்று காலை வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியிருக்கும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 850 கிலோமீட்டர் வடக்கு - வடமேற்கே நிலை கொண்டுள்ளது.

இது படிப்படியாக வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடந்து வருகிறது. மணிக்கு 180 முதல் 190 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 210 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்ற செய்தி பகீர் கிளப்பியுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
மே 14 முதல் 16 வரை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 17 முதல் 18 வரை: ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 14 முதல் 18 வரை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 2 - 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரக்கூடும்.

குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈர்ப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.
தலைநகர் சென்னையை (Chennai Weather) பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 39 முதல் 30 டிகிரிக்கு இடையில் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் 29-30 டிகிரி செல்சியஸ்க்கு இடையில் காணப்படும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசும். எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications