கடும் அனல் காற்று வீசும்.. வெப்பச்சலனத்தால் லேசான மழைக்கும் வாய்ப்பு- சென்னை வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஃபனி புயல் ஒடிஸாவிலிருந்து மேற்கு வங்கத்துக்கு நுழைந்தது. இந்த நிலையில் ஒடிஸாவில் ஏற்படுத்திய சேதத்தை போல் அங்கும் ஏற்படுத்தியது. உண்மையில் பார்க்க போனால் இந்த புயல் தமிழகத்துக்கு வர வேண்டியது.

Chennai Meteorological department says that Tamilnadu will face heavy heat waves

ஆனால் அது சென்னையிலிருந்து விலகி ஒடிஸா பக்கம் சென்றுவிட்டது. இதனால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் வேறு தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உண்டு.

திருத்தணியில் அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருக்கும் . சென்னையில் 100 டிகிரி வரை வெப்பம் இருக்க வாய்ப்புண்டு. ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் சோளிங்கரில் 14 செ.மீ.ரும் திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டையில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+