வடக்கே “ஷிப்ட்” ஆன மேகங்கள்.. 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! லிஸ்ட்ல சென்னையும் இருக்கே - அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 13 முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
திருப்புவனம் (சிவகங்கை) 11, அரிமளம் (புதுக்கோட்டை) 8, அறந்தாங்கி (புதுக்கோட்டை), திருப்பத்தூர் (சிவகங்கை), மரக்காணம் (விழுப்புரம்), நகுடி (புதுக்கோட்டை) தலா 7, மீ மாத்தூர் (கடலூர்), வேப்பூர் (கடலூர்), விருதுநகர் தலா 6, அகரம் சீகூர் (பெரம்பலூர்), புலிப்பட்டி (மதுரை), வானூர் (விழுப்புரம்), காரியாபட்டி (விருதுநகர்), திருவாடானை (ராமநாதபுரம்), காட்டுமயிலூர் (கடலூர்), கடலூர், நீடாமங்கலம் (திருவாரூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வெட்டிகாடு (தஞ்சாவூர்), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), செய்யாறு (திருவண்ணாமலை), தொழுதூர் (கடலூர்), வானமாதேவி (கடலூர்), தொண்டி (ராமநாதபுரம்) தலா 5, மதுராந்தகம் (செங்கல்பட்டு), புதுச்சேரி, மணமேல்குடி (புதுக்கோட்டை), கீழச்செருவை (கடலூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), ஆயின்குடி (புதுக்கோட்டை), பரூர் (கிருஷ்ணகிரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), துவாக்குடி IMTI (திருச்சி), செய்யூர் (செங்கல்பட்டு), விருதாச்சலம் (கடலூர்), கறம்பக்குடி (புதுக்கோட்டை), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), குப்பநத்தம் (கடலூர்), ஆர்எஸ்எல்-3 வளத்தி (விழுப்புரம்), முத்துப்பேட்டை (திருவாரூர்), சித்தம்பட்டி (மதுரை), ஆலங்காயம் (திருப்பத்தூர்) தலா 4, நன்னிலம் (திருவாரூர்), விருத்தாசலம் KVK AWS (கடலூர்), புதுக்கோட்டை, கொடைக்கானல் (திண்டுக்கல்), மதுரை விமான நிலையம் (மதுரை), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), தேவகோட்டை (சிவகங்கை), திருவாலங்காடு (திருவள்ளூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), ஜெயம்கொண்டம் (அரியலூர்), குடிமியான்மலை (புதுக்கோட்டை), திருமயம் (புதுக்கோட்டை), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), திண்டிவனம் (விழுப்புரம்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), நெய்வாசல் தென்பத்தூர் (தஞ்சாவூர்), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), பெலாந்துறை (கடலூர்), குருங்குளம் (தஞ்சாவூர்), திருவாரூர், ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), செந்துறை (அரியலூர்), ஆர்.எஸ்.எல்-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை), ஆம்பூர் (திருப்பத்தூர்), லக்கூர் (கடலூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), பொன்மலை (திருச்சி), பொதுப்பணித்துறை டிராவலர்ஸ் பங்களா (சிவகங்கை), ஹரூர் (தருமபுரி), வி.களத்தூர் (பெரம்பலூர்), மதுரை தெற்கு, திண்டுக்கல், பேராவூரணி (தஞ்சாவூர்), கல்லந்திரி (மதுரை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), மிமிசல் (புதுக்கோட்டை), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), டிசிஎஸ் மில் கெத்தண்டப்பட்டி (திருப்பத்தூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), மேலூர் (மதுரை), செஞ்சி (விழுப்புரம்), ஒர்த்தநாடு (தஞ்சாவூர்) தலா 3, திருச்சி விமான நிலையம் (திருச்சி), திருமங்கலம் (மதுரை), காரைக்குடி (சிவகங்கை), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), தல்லாகுளம் (மதுரை), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), மேலாலத்தூர் (வேலூர்), செங்கல்பட்டு, பெருங்களூர் (புதுக்கோட்டை), பெரம்பலூர், வேதாரண்யம் (நாகப்பட்டினம்), புதுச்சத்திரம் (நாமக்கல்), டிஎஸ்எல் ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), எஸ்ஆர்சி குடிதாங்கி (கடலூர்), குடியாத்தம் (வேலூர்), திருப்பத்தூர், கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), தானியமங்கலம் (மதுரை), எறையூர் (பெரம்பலூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), திருப்போரூர் (செங்கல்பட்டு), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), பெனுகொண்டாபுரம் (திருவண்ணாமலை), ஆரணி (திருவண்ணாமலை), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), விரகனூர் அணை (மதுரை), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சி), மலையூர் (புதுக்கோட்டை), விழுப்புரம், மங்களபுரம் (நாமக்கல்), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), விருதுநகர் AWS, செங்கம் (திருவண்ணாமலை), நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி, ஆர்எஸ்எல்-கேதார் (விழுப்புரம்), வத்தலை அணைகட்டு (திருச்சி), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை) தலா 2, இளையங்குடி (சிவகங்கை), கேசிஎஸ் மில்- கடவனூர் (கள்ளக்குறிச்சி), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), ஆர்எஸ்எல்-2 கஞ்சனூர் (விழுப்புரம்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), ஆர்எஸ்எல்-3 செம்மேடு (விழுப்புரம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), டிஎஸ்எல் கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), கேசிஎஸ் மில்-2 கச்சிராயப்ப (கள்ளக்குறிச்சி), வல்லம் (தஞ்சாவூர்), நத்தம் (திண்டுக்கல்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) , தலைஞாயிறு (நாகப்பட்டினம்), பெரியபட்டி (மதுரை), காஞ்சிபுரம், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), தலைவாசல் (சேலம்), காரையூர் (புதுக்கோட்டை), நாவலூர் கோட்டைப்பட்டு (திருச்சி), கல்லிக்குடி (மதுரை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), பாண்டவையார் தலைமை (திருவாரூர்), தீர்த்தாண்டதானம் (இராமநாதபுரம்), கீரனூர் (புதுக்கோட்டை), டேனிஷ்பேட்டை (சேலம்), ஆர்.எஸ்.எல்.எல்-2 நெமூர் (விழுப்புரம்), ஆர்.எஸ்.எல். 2 சூரப்பட்டு (விழுப்புரம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), Rscl-2 கோலியனூர் (விழுப்புரம்), பணப்பாக்கம் (இராணிப்பேட்டை), சிவகங்கை (சிவகங்கை), வீரகனூர் (சேலம்), Rscl-2 வளவனூர் (விழுப்புரம்), Rscl வல்லம் (விழுப்புரம்), டிஎஸ்எல் தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), இடையபட்டி (மதுரை), பரங்கிப்பேட்டை (கடலூர்), ஆர்எஸ்எல்-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), வாடிப்பட்டி (மதுரை), கிளானிலை (புதுக்கோட்டை), மேட்டுப்பட்டி (மதுரை),), கேசிஎஸ் மில்- மூங்கில்துறை (கள்ளக்குறிச்சி), லால்பேட்டை (கடலூர்), விரிஞ்சிபுரம் அவ்ஸ் (வேலூர்), பண்ருட்டி (கடலூர்), மஞ்சலர் (தேனி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), கே.எம்.கோயில் (கடலூர்), புது. வேட்டக்குடி (பெரம்பலூர்), வால்பாறை பாப் (கோயம்புத்தூர்), மானாமதுரை (சிவகங்கை), பாஸ்ல் மணம்பூண்டி (விழுப்புரம்), பாஸ்ல் முகையூர் (விழுப்புரம்), சத்தியார் (மதுரை), பெரியகுளம் (தேனி), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) , ஆண்டிபட்டி (மதுரை), திருக்குவளை (நாகப்பட்டினம்), வட்டானம் (ராமநாதபுரம்), ஆண்டிபட்டி (தேனி), மன்னார்குடி (திருவாரூர்), போளூர் (திருவண்ணாமலை), சுத்தமல்லி அணை (அரியலூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), அரண்மனைப்புதூர் (தேனி), பாஸ்ல் மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), டிஎஸ்எல் எறையூர் (கள்ளக்குறிச்சி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), சிதம்பரம் (கடலூர்), பரமக்குடி (ராமநாதபுரம்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜூலை 15 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை வட தமிழக-ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12.07.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14.07.2023, 15.07.2023: இலங்கைய ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் நாளை வடக்கு கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
13.07.2023, 14.07.2023: கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள், இலட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலதீவு பகுதிகள், தென்கிழக்கு, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15.07.2023: வடக்கு கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications