ஒரு ரூபாய் கொடுக்காத மத்திய அரசு.. அலேக்காக அடையாற்றை அள்ளிய தமிழக அரசு.. சென்னையில் சுவாரசியம்
சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக அடையாறு பகுதியின் கீழ் சுரங்கம் தோண்டும் இயந்திரம் (டிபிஎம்) மொத்தமாக பணிகளை முடித்துள்ளது. ஏற்கனவே ஆற்றின் முழுப்பகுதியிலும் இந்த இயந்திரம் சுரங்கம் தோண்டி உள்ளது. ஆறு முடிந்து மற்ற நிலப்பகுதிகளிலும் இறுதிக்கட்ட பணிகள் நடப்பதால் இந்த வாரமே மொத்தமாக பணிகள் அங்கே விரைவில் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடக்கும் என்கிறார்கள்.
காவிரி என்ற இந்த பெயர் கொண்ட இயந்திரம் விரைவில் முழுமையாக சுரங்கம் தோண்டி முடிக்கும். இயந்திரம் மார்ச் மாதத்தில் சேத்துப்பட்டு ஏரிக்கு கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தொடங்க உள்ளது. சென்னை மெட்ரோ ரெயிலின் கட்டம்-2 இன் 3-ம் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதைகள் மாதவரம் பால் காலனியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது.

மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-3-இல் ஒப்பந்தம் TU02 (கெல்லிஸ் முதல் தரமணி வரை) சுரங்கப்பாதை கட்டுமான பணிகள், 16.02.2023 அன்று தொடங்கியது. "காவிரி" மற்றும் "அடையாறு" என இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரை 1.226 கி.மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது.
இதில் "காவிரி" சுரங்கம் தோண்டும் இயந்திரம் 583 மீ. சுரங்கம் தோண்டும் பணியை முடித்துதற்போது வெற்றிகரமாக அடையாறு ஆற்றில் நுழைந்து அடியில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியுள்ளது. "அடையாறு" சுரங்கம் தோண்டும் இயந்திரம், 250 மீ. தொலைவில் நெருக்கமாகப் பின் தொடர்ந்து 20 நாட்களுக்குள் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கும். இந்த இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திரு.வி.க. பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து அடையார் சந்திப்பு நிலையத்தை வந்தடையும்.
சென்னை மெட்ரோ: இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமைபொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்த்தனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.
மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமானநிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை மெட்ரோ இரயில் சேவைகளை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ அதேபோல் இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.
இதன் காரணமாக சென்னையில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் மெட்ரோ பயன்பாடு 6 கோடி என்ற அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் மட்டும் மெட்ரோவில் 87 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். தினசரி பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை 2.8 லட்சத்தை தாண்டி உள்ளது.
பணம் தரவில்லை: சென்னை, மதுரை, கோயம்புத்தூருக்கு அமைக்கப்பட உள்ள மெட்ரோவிற்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காமல் தமிழ்நாடு அரசை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. அதிலும் கோவை, மதுரையில் முழுமையான டிபிஆர் ரிப்போர்ட் அளிக்கப்பட்ட பின்பும் அங்கே பணிகளை தொடங்க அரசு இன்னும் அனுமதிக்கவில்லை. சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு இதுவரை தமிழக அரசுக்கு மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை.
ஏசியன் வங்கி உள்ளிட்ட சர்வதேச வங்கிகளின் உதவியுடன் தமிழக அரசு மெட்ரோ அமைத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேத்துப்பட்டு பகுதியில் பூமிக்கடியில் துளையிடுவதற்கு எல்&டி நிறுவனம் சிறுவாணி எனும் பிரமாண்ட துளையிடும் பணியினை முடித்து உள்ளது. 11 மாதப் பயணம் முடிந்து வெற்றிகரமாக பணியை முடித்தது 'சிறுவாணி' இயந்திரம்.
இது போக பூந்தமல்லியில் இருந்து பாரந்தூர் வரையிலும், காரிடார்-5-ஐ கோயம்பேடு முதல் ஆவடி வரையிலும், இரண்டாம் கட்ட நடைபாதை-4 நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கைகள் (டிபிஆர்) தயாரிப்பதற்காக, தமிழ்நாடு அரசு CMRL-க்கு 4.8 கோடி ரூபாய் அனுமதி அளித்துள்ளது. கோயம்பேடு முதல் ஆவடி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ அமைக்கவும் மத்திய அரசு பணம் தரவில்லை. ஆனால் இதை மீறி தமிழ்நாடு அரசு சாதித்து உள்ளது.
மெட்ரோ பணம்: உத்தர பிரதேசம் போன்ற முன்னேறாத மாநிலங்களில் 7 மெட்ரோ சேவைகள் உள்ள நிலையில் பொருளாதாரத்தில் 2ம் இடத்தில் தமிழ்நாட்டிற்கு, புதிய மெட்ரோ சேவைகளை தொடங்க இன்னும் மத்திய அரசு அனுமதி அளிக்காமல் உள்ளது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டியும் கூட இதற்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை.
ஏற்கனவே சென்னை மெட்ரோ 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் பணத்தில்தான் கடன் வாங்கி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மத்திய அரசு அனுமதி தராத காரணத்தால் மதுரை, கோவை மெட்ரோ என்று இரண்டு திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
மத்திய அரசு பணம் தரவில்லை என்றாலும் மெட்ரோ பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்பட்டு இப்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications