ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. ரயிலில் டிக்கெட் உடனே எடுக்கணுமா.. இதோ இதை படிங்க.. மெட்ரோ மாஸ்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்க புதிய நடைமுறையை, மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
சென்னை மெட்ரோவில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. குறிப்பாக, சென்னையில் மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடம் கட்டண முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலில் செல்லும் பயணிகள் இங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு, அதன்பிறகு மெட்ரோவில் ஏறி சென்று வருகின்றனர்... இதற்கு கட்டணமாக 6 மணிநேரத்துக்கு டூவீலர் வாகனங்களுக்கு ரூ.20-ம், காருக்கு ரூ.30-ம் வசூலிக்கப்படுகிறது.

அறிவிப்பு பலகை: ஆனால், வாகனங்களில் உள்ளே இருந்து கொண்டே சிகரெட் பிடிப்பதும், தண்ணி அடிப்பதும் என பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடக்கின்றன.. இதனால் அங்கு பல்வேறு பிரச்சினைகளும் உருவாகிவிடுகிறது.. அதனால், இங்கு நிறுத்தி வைக்கப்படும் வாகனத்தில் உட்காருவதற்கு யாருக்கும் அனுமதியில்லை என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.. இதற்கான அறிவிப்பு பலகையையும் அனைத்து மெட்ரோ ரெயில் நிலைய நுழைவு வாயிலிலும் அதிகாரிகள் வைத்துள்ளனர்.
அதேபோல, சில நாட்களுக்கு முன்பு, மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.. அதாவது, பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த அதிரடியை மேற்கொண்டிருந்தது.. இப்போது இன்னொரு வசதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது..
விடுமுறை நாட்கள்: அந்தவகையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.. சென்னையில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், பெரும்பாலானோர், ரயில் பயணத்தை விரும்பி செல்கின்றனர்... அதேசமயம், நிரம்பி நிரம்பி கூட்டம் வழிவதும் அதிகமாகி வருகிறது. மற்றொருபக்கம், விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், டிக்கெட் எடுக்க நீண்ட தூரம் காத்திருக்கும் நிலைமையும் ஏற்படுகிறது.

இவைகளை எல்லாம் சரிசெய்யவே, மெட்ரோ நிர்வாகம் இந்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது... அதாவது மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் செல்போனில் உள்ள வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.. இதன்மூலம், இதன் மூலம் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் பதிவு செய்யலாம்.
எப்படி டிக்கெட் பெறுவது தெரியுமா?
சென்னை மெட்ரோ நிறுவனத்தின் பொதுவான கைப்பேசி எண் பயணிகளுக்கு வழங்கப்படும். இந்த எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் (Hi) ஹாய் என்று அனுப்ப வேண்டும்.
பின்னர், சார்ட் பாட் என்ற தகவல் வரும்.
அதில் டிக்கெட் எடுப்பது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கும். பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ இரயில் நிலையம், சேரும் ரயில் நிலையம் ஆகியவற்றை பதிவுசெய்து, வாட்ஸ் அப், மூலமோ அல்லது ஜி-பே மூலமாகவோ பணம் செலுத்தினால் போதும்.
பயண டிக்கெட் வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்துவிடும்.
இந்த டிக்கெட்டை ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள க்யூ-ஆர் கோடு ஸ்கேனரில் காண்பிப்பதன் மூலம் மெட்ரோ ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியும்.
பயணம் முடிந்து, சென்று சேர வேண்டிய இடம் வந்ததும், அங்குள்ள மெசினில் க்யூ-ஆர் கோர் ஸ்கேனரில் டிக்கெட்டை காண்பித்தால் வெளியே செல்ல முடியும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications