28 புதிய மெட்ரோ ரயில்கள் வாங்க புதிய டெண்டர்! 2028 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கும்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவையை அதிகப்படியானவர்களுக்கு வழங்கிடும் நோக்கி 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் 6 பெட்டிகள் கொண்டவை ஆகும்.
இதுகுறித்து தமிழ் ரயில் செய்திகள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகள் கூட்டத்தைச் சமாளிக்கவும், சேவையை மேம்படுத்தவும் 28 புதிய மெட்ரோ ரயில்களை (6 பெட்டிகள் கொண்டவை) வாங்குவதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) கோரியுள்ளது.

திட்ட மதிப்பு: சுமார் ₹2,820.90 கோடி மதிப்பீட்டில் இந்தப் புதிய ரயில்கள் வாங்கப்பட உள்ளன.
கூடுதல் பெட்டிகள்: தற்போதுள்ள மெட்ரோ ரயில்களில் 4 பெட்டிகள் மட்டுமே உள்ளன. ஆனால், புதிதாக வாங்கப்படவுள்ள இந்த 28 ரயில்களும் 6 பெட்டிகளைக் (6-Coach Trains) கொண்டிருக்கும். இது அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் செல்ல உதவும்.
முதற்கட்ட வழித்தடங்களில் (விமான நிலையம் - விம்கோ நகர் & சென்ட்ரல் - பரங்கிமலை) பீக் ஹவர்ஸில் (Peak Hours) ஏற்படும் கடுமையான நெரிசலைக் குறைப்பது.
தற்போதுள்ள 52 ரயில்களுடன் இந்த 28 புதிய ரயில்களும் சேரும்போது, மொத்த ரயில்களின் எண்ணிக்கை 80-ஆக உயரும்.
நிதியுதவி: இத்திட்டத்திற்குப் பன்னாட்டு வங்கிகளிடமிருந்து நிதியுதவி பெறப்பட உள்ளது. இந்த ரயில்கள் 2028-ஆம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை மூலம், ரயில்களுக்கு இடையிலான கால இடைவெளி குறைக்கப்பட்டு, பயணிகள் காத்திருக்கும் நேரம் வெகுவாகக் குறையும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications