சென்னையில் 3 இடங்களில்.. லுலு ஹைப்பர் மார்க்கெட்.. எங்கே என்று தெரிந்தால்.. அசந்து போயிடுவீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: லுலு ஹைப்பர் மார்க்கெட், மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களில் திறக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அடுத்த சில மாதங்களில், மெட்ரோ ரயில் பயணிகள், மெட்ரோ ரயிலில் ஏறும் முன், மளிகை பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை எளிதாக அவர்கள் மெட்ரோ ரயில் நிலையத்திலேயே இனி வாங்க முடியும்.

metro

அதன்படி சென்னை சென்ட்ரல், ஷெனாய் நகர் மற்றும் விம்கோ நகர் ஆகிய நிலையங்களில் ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ நிலையங்களில் ஹைப்பர் மார்கெட்டின் நகர விற்பனை நிலையங்கள் இருப்பதால், மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் வருகை அதிகரிக்கலாம் என்று CMRL அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஷெனாய் நகரில், திரு.வி.கா பூங்காவிற்கு கீழே ஒரு லட்சம் சதுர அடியில் ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்ட்ரலில், 28,000 சதுர அடியில் கான்கோர்ஸ் மட்டத்திலும், விம்கோ நகரில், மெட்ரோ ரயில் பராமரிப்புக் மையத்திற்கு மேல் 40,000 சதுர அடி இடத்திலும் ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்படும். சென்னை சென்ட்ரல் மற்றும் ஷெனாய் நகர் மெட்ரோ நிலையங்களில் உள்ள ஹைப்பர் மார்க்கெட்களை மார்ச்/ஏப்ரல் மாதத்திற்குள் திறப்போம். இன்றில் இருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, விம்கோ நகரில் மெட்ரோ திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பைக் மற்றும் கார் பார்க்கிங் உள்ள இடங்களில் காணப்படும் மெட்ரோ ரயில் சேவை மையங்களில் ஹைப்பர் மார்க்கெட் அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மெட்ரோ பணிகள்: சென்னையில் மெட்ரோ பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மெட்ரோ ரயில் பணிக்காக அடையாறு பகுதியின் கீழ் சுரங்கம் தோண்டும் இயந்திரம் (டிபிஎம்) மொத்தமாக பணிகளை முடித்துள்ளது. ஏற்கனவே ஆற்றின் முழுப்பகுதியிலும் இந்த இயந்திரம் சுரங்கம் தோண்டி உள்ளது. ஆறு முடிந்து மற்ற நிலப்பகுதிகளிக்கும் இறுதிக்கட்ட பணிகள் நடப்பதால் இந்த வாரமே மொத்தமாக பணிகள் அங்கே விரைவில் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடக்கும் என்கிறார்கள்.

காவிரி என்ற இந்த பெயர் கொண்ட இயந்திரம் விரைவில் முழுமையாக சுரங்கம் தோண்டி முடிக்கும். இயந்திரம் மார்ச் மாதத்தில் சேத்பேட் ஏரிக்கு கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தொடங்க உள்ளது. சென்னை மெட்ரோ ரெயிலின் கட்டம்-2 இன் 3-ம் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதைகள் மாதவரம் பால் காலனியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது.

மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-3-இல் ஒப்பந்தம் TU02 (கெல்லிஸ்முதல் தரமணி வரை) சுரங்கப்பாதை கட்டுமான பணிகள், 16.02.2023 அன்று தொடங்கியது. "காவிரி" மற்றும் "அடையாறு" என இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்துஅடையாறு சந்திப்பு நிலையம் வரை 1.226 கி.மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது.

இதில் "காவிரி" சுரங்கம் தோண்டும் இயந்திரம் 583 மீ. சுரங்கம் தோண்டும் பணியை முடித்துதற்போது வெற்றிகரமாக அடையாறு ஆற்றில் நுழைந்து அடியில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியுள்ளது. "அடையாறு" சுரங்கம் தோண்டும் இயந்திரம், 250 மீ. தொலைவில் நெருக்கமாகப் பின் தொடர்ந்து 20 நாட்களுக்குள் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கும். இந்த இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திரு.வி.க. பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து அடையார் சந்திப்பு நிலையத்தை வந்தடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+