சென்னை சர்வதேச லெவலில் மாற போகுது.. மெட்ரோ டூ பஸ் டூ மின்சார ரயில்.. களமிறக்கப்படும் மெகா திட்டம்!
சென்னை; சென்னையில் 23 இடங்களில் மல்டி - மாடல் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதாவது மெட்ரோ - பேருந்து - மின்சார ரயில் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக 23 இடங்களில் மாற்றம் செய்ய உள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மல்டி மாடல் ஹப்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதால், 2025 ஆம் ஆண்டில் கட்டம்-2 மெட்ரோ ரயில்கள் இயங்கத் தொடங்கும் போது பயணிகள் மிக எளிதாக பயணம் செய்ய முடியும். பயணிகள் மெட்ரோ ரயில்களில் இருந்து MTC பேருந்துகள், புறநகர் மற்றும் MRTS ரயில்கள் அல்லது மெட்ரோ ரயில் கட்டம்-1 வழித்தடங்களுக்கு தடையின்றி நொடிகளில் மாறலாம் . 23 இடங்களில் இந்த வசதி வர உள்ளது.

சர்வதேச நாடுகளில் மட்டும் உள்ள இந்த வசதி சென்னையில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த மையங்கள் 116.1 கிமீ கட்டம்-2 நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் 2025 முதல் 2028 வரை இந்த மெட்ரோ பணிகள் நடக்கும்.
திருவான்மியூர் மற்றும் திருமயிலையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் எம்ஆர்டிஎஸ் நிலையங்களுடனும், மந்தவெளி மற்றும் மாதவரத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்களுடனும் இணைக்கப்படும். மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கிமீ மெட்ரோவில் இது போல ஒன்பது மையங்கள் அமைக்கப்படும்.
திருவான்மியூர், அடையாறு பேருந்து நிலையம், மந்தைவெளி, திருமயிலை, சேத்துப்பட்டு, அயனாவரம், பெரம்பூர் புறநகர் பகுதிகள், கீழ்ப்பாக்கம், ஆயிரம் விளக்குகள் ஆகிய இடங்களில் அவை வரும்.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26.1 கிமீ மெட்ரோ-4ல், கோடம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், பூந்தமல்லி பேருந்து நிலையம், நந்தனம் மற்றும் வடபழனி ஆகிய ஐந்து மையங்கள் அமைக்கப்படும். 44.6 கிமீ மெட்ரோ-5ல், மாதவரம் பேருந்து நிலையம், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், அண்ணாநகர், கோயம்பேடு, ஆலந்தூர், செயின்ட் தோ வில்லிவாக்கம் வாணுவம்பேட்டை, கீழ்கட்டளை ஆகிய இடங்களில் ஒன்பது மையங்கள் அமைக்கப்படும்.
அனைத்து போக்குவரத்து முறைகளையும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக கொண்டு வருவதன் மூலம் பல்வேறு சேவைகளுக்கு இடையில் மக்கள் எளிமையாக மாறுவதை உறுதி செய்ய முடியும். கட்டம் 1 இல், MTC பேருந்து நிறுத்தங்கள் சில மெட்ரோ நிலையங்களுக்கு அருகில் மாற்றப்பட்டன. இந்த முறை எல்லா பேருந்து நிலையமும் மெட்ரோவிற்கு கீழ் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ: சென்னை மெட்ரோ பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. புதிய மெட்ரோ பாதைகளுக்கான கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளன. 2027ம் ஆண்டிற்குள் மெட்ரோ கட்டுமானம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications