தி.நகரில் மெட்ரோ செய்ய போகும் சம்பவம்.. ரயில்வே ஸ்டேஷனில் வரும் செம ஏற்பாடு.. பயணிகளுக்கு ஹேப்பிதான்
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான ஆரஞ்சு லைன் மெட்ரோ பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் பனகல் பார்க் ஸ்டேஷனில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஸ்டேஷனில் ஐந்து நுழைவு பகுதிகளை அமைக்க மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. துவக்கத்தில் மெட்ரோ ரயிலுக்கு போதிய பயணிகள் வரவேற்பு இல்லாதது போல தெரிந்தாலும் தற்போது சென்னையின் முக்கிய போக்குவரத்து அமைப்பாக மெட்ரோ மாறிவிட்டது. தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால், மெட்ரோ ரயில்களில் தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிகறது. வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதில் வழித்தடம் 3 மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ நீளத்தில் 19 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமைக்கப்படவுள்ளன. இதில் கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரையிலான ஆரஞ்சு லைன் மெட்ரோ மிக முக்கியமான ரூட்டாக பார்க்கப்படுகிறது.
இந்த ரூட்டில் தான் நந்தனம் மற்றும் கோடம்பாக்கம் இடையில் பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் வரவுள்ளது. சென்னை தி நகரில் உள்ள பனகல் பூங்கா ரயில்வே ஸ்டேஷன் சுரங்கத்தில் அமைகிறது. பனகல் பூங்கா ஸ்டேஷனை பொறுத்தவரை மிக முக்கியமான ஸ்டேஷன்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தி.நகர் சென்னையின் மிக முக்கியமான வர்த்தக பகுதியாக உள்ளது. இதனால் பயணிகள் கூட்டம் இங்கு எப்போதுமே இருக்கும். இதனை கருத்தில் கொண்டு பிரமாண்டமாக இந்த மெட் ரோ ரயில் நிலையம் அமைகிறது. வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த பணிகள் முடிவடையும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்கிறார்கள்
பயணிகள் கூட்ட நெரிசலை கையாளும் விதமாக ஐந்து நுழைவு பகுதிகள் இந்த சுரங்க ஸ்டேஷனில் அமைக்கப்படுகிறது. சிவஞானம் தெரு, பின்ஜலா சுப்ரமணியம் தெரு, பிரகாஷம் தெரு, பாஷியம் தெரு, நாகேஸ்வரம் தெரு ஆகிய ஐந்து இடங்களில் நுழைவு பகுதி அமைக்கப்படுகிறது. பனகல் பார்க் ஸ்டேஷனில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதை கருத்தில் கொண்டு ஐந்து நுழைவு பகுதிகளுடன் அமைகிறது.
மெட்ரோ ரயில் மூலம் தி.நகர் வர வேண்டும் என்றால் பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால் போதும். இந்த ரயில் நிலையம் தி.நகரின் புதிய அடையாளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டி பஜார், உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு உள்ளிட்ட இடங்களில் ஜவுளி, பாத்திரம், நகைகள், செல்போன், வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் பல கடைகள் உள்ளன. இதனால் சென்னையின் மிக முக்கிய வர்த்தக முனையமாக இது உள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications