கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகள் தொடங்குகிறது.. ஸ்டேஷன் மட்டுமல்ல.. கூடவே வருது பிரம்மாண்ட சர்ப்ரைஸ்
சென்னை: கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு (KCBT) அருகில் மிகப்பெரிய மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இங்கே மெட்ரோ ரயில் நிலையத்துடன் நவீன வணிக வளாகம் அமையவுள்ளது. இந்த வளாகத்தில் வாகன நிறுத்துமிடங்கள், கடைகள், ஏடிஎம்கள் மற்றும் தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனம் சார்பாக ஏர்போர்ட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. இந்த விரிவாக்கத்திற்காக 60 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் செயல்முறையை மெட்ரோ தொடங்கி உள்ளது. 15.5 கிமீ தூரத்திற்கு சென்னை விமான நிலையத்தை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் (KCBT) இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது
இந்த விமான நிலையம்-கிளம்பாக்கம் வழித்தடமானது, 15.46 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்படும். ஜி.எஸ்.டி., சாலையில், முழுவதுமாக உயர்த்தப்பட்ட பாதையாக இது அமைக்கப்படும். பல்லாவரம், குரோம்பேட்டை, திரு வி கா நகர், தாம்பரம், இரும்புலியூர், பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கம் மெட்ரோ
மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்காக, நிலம் கையகப்படுத்தவும், பயன்பாட்டு வசதிகளை மாற்றியமைக்கவும் தமிழ்நாடு அரசு ₹1,964 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மொத்தம் 15.46 கி.மீ. தூரத்திற்கு அமையவுள்ள இத்திட்டத்தால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடி மெட்ரோ அணுகல் கிடைக்கும்.
புதிய வழித்தடத்தில் விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டப்படவுள்ளன. இந்த திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகள் தொடக்கம்
சென்னை விமான நிலையம் - கிளம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்து ₹1,964 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 15.46 கி.மீ. நீளமுள்ள இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பயன்பாட்டுப் பணிகளுக்கான ஆரம்பக்கட்டப் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இந்த வழித்தடம், முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் நீட்டிப்பாக அமையும். முதற்கட்டத் திட்டம், சென்னை விமான நிலையத்தை வட சென்னையுடன், சென்னை சென்ட்ரல் வழியாக நீல மற்றும் பச்சை வழித்தடங்களில் இணைக்கிறது. கிளம்பாக்கம் வரை இந்த வழித்தடம் நீட்டிக்கப்பட்டால், கிளம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னையின் அனைத்துப் பகுதிகளுடனும் இணைக்கப்படும்.
இந்த 15.46 கி.மீ. நீள வழித்தடத்தில், பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வரை 12.64 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்டச் சாலையும் அமைக்கப்படவுள்ளது. இந்த நீட்டிப்புத் திட்டத்தின் மொத்தச் செலவு ₹9,335 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உயர்மட்டச் சாலையின் கட்டுமானச் செலவு ₹2,281 கோடி அடங்கும்.
கிளம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் (KCBT) திறக்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்குப் போக்குவரத்து ஒரு பெரிய சவாலாக உள்ளது. தற்போது, கிளம்பாக்கம் செல்ல எம்.டி.சி பேருந்துகள் மட்டுமே ஒரே வழி. இனி அந்த பிரச்னையை சரி செய்ய மெட்ரோ இந்த ரூட்டில் அமைக்கப்பட உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications