தாம்பரம் கிழக்கு பைபாஸ்.. மெட்ரோ பணிக்கு முன்பு.. பெருங்களத்தூரில் நடக்க வேண்டிய பெரிய மாற்றம்
சென்னை: விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை உடனே செயல்படுத்த முடிவு செய்துள்ள அரசு, அதற்காக முதற்கட்டமாக ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை ஆரம்பிக்க போகிறது. மத்திய அரசு அனுமதித்தால், பணிகள் விறுவிறுப்பாக தொடங்கிவிடும் என்கிற நிலைக்கு திட்டம் முன்னேறி உள்ளது. அதேநேரம் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவது ஒருபுறம் எனில் ஜிஎஸ்டி சாலையில் சிக்கல் இல்லாமல் போக்குவரத்து நடைபெறவேண்டும் என்றால், தாம்பரத்தின் நுழைவு வாயிலுக்கு மாற்றுப்பாதை தேவை.. தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் விமான நிலையம் - விம்கோ நகர், சென்டிரல் - பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 2-ம் கட்டம் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 116.1 கிலோ மீட்டர் தொலைவில் 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது.

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்
சென்னையின் புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்தில் உள்ளதால், கிளாம்பாக்கம் வரையில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பஸ் முனையம் வரையில் நீட்டிப்பு செய்ய சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. இந்த நிலையில், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையில் 15.46 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்கட்ட பணிகளை தொடங்க தமிழக அரசு ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
எவ்வளவு முக்கியம்
ஏனெனில் சென்னை புறநகர் பகுதி மக்கள், எளிதாக சென்னைக்குள் எங்கு வேண்டுமானாலும் வேலைக்கு சென்றுவர முடியும். எளிதாக இனி வேளச்சேரி, ஓஎம்ஆர் பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு போய்விட முடியும். சென்னையில் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட்ட பிறகு சென்னையின் எந்த பகுதி மக்களும் எளிதாக எங்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்ய முடியும். மக்களுக்கு விரைவான போக்குவரத்து வசதி கிடைத்துவிடும்..
தமிழக அரசு பணம் ஒதுக்கீடு
கிளாம்பாக்கம் மெட்ரோவை பொறுத்தவரை தமிழக அரசு அனுமதித்துள்ள நிதியில், திட்டத் துக்கான நிலம் கையகப்படுத்துதல், அதற்கான செயல்முறைகளுக்கான நிதி செலவிடுதல் உள்ளிட்ட ஆரம்ப கட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உளள்ன. அதன்படி, நிலம் கையகப்படுத்துதலுக்கு ரூ.1,816 கோடியும், மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான புவியியல் ஆய்வு, நிலத்தடி ஆய்வு, வேலிகள் அமைத்தல், மரங்கள் அகற்றுதல், அவற்றை மாற்று இடத்தில் நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பணிகளுக்கு ரூ.112.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
எத்தனை கோடிகள் ஒதுக்கீடு
மேலும், நிர்வாகச் செலவுகள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, மறு குடியமர்வு மற்றும் இதர செலவுக்கு ரூ.24 கோடியும், திட்ட வடிவமைப்பு மற்றும் பொதுவான செலவுகளாக ரூ.6.83 கோடியும், திட்டத்துக்கான அனைத்துப் பொருள்கள் மீதும் 3 சதவிகித செலவினங்கள், நிலம் மற்றும் மறுவாழ்வு உள்ளிட்டவற்றுக்காக ரூ.4.30 கோடி என மொத்தம் ரூ.1,964 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளில் அமலுக்கு வந்துவிடும்
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்த உடன், பணிகள் ஆரம்பிக்கும். குறைந்தது 4 ஆண்டுகள் ஆகும். 2029ம் ஆண்டு கிளாம்பாக்கம் மெட்ரோ செயல்பாட்டிற்கு வந்துவிடும். பெரிய அளவில் நிலம் கையகப்படுத்துதல் சிக்கல் வரவாய்ப்பு இல்லை என்பதால் பணிகள் செய்வது எளிது தான். ஆனால் பல்லாவரம் முதல் கிளாம்பாக்கம் வரை நெரிசல் அதிகமாக இருக்கும். குறிப்பாக தாம்பரத்திற்குள் தான் எல்லா வண்டிகளும் வருகின்றன. தென்சென்னை மக்களும் தாம்பரத்தில் நுழைந்து தான் வேளச்சேரி மேடவாக்கம் போக வேண்டிய நிலை இருக்கிறது.
குரோம்பேட்டை நெரிசல்
எனவே மெட்ரோ ரயில் பணிகள்ஆரம்பிக்கும் போது, நெரிசல் இன்னமும் அதிகமாகும். சிக்கலும் அதிகமாகும். குரோம்பேட்டை பற்றி எல்லாம் சொல்லவே வேண்டாம்.. எப்படி சிக்கலான இடம் என்று எல்லாருக்குமே தெரியும். பாலத்திலேயே சிக்னல் போடும் அளவிற்கு நிலைமை உள்ளது. எனவே. தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை
அந்த திட்டம் நிறைவேறினால் , பெருங்களத்தூர் பாலத்தில் அப்படியே ஏறி வண்டலூர் வனப்பகுதி வழியாக அப்படியே நேராக சேலையூரில் இணைந்து மேடவாக்கம் போய், வேளச்சேரி போய்விடலாம். இதன் மூலம் தாம்பரம் இல்லாமல் மாற்று வழி கிடைக்கும். பெருங்களத்தூரில் இருந்து சதாநாதபுரம், சேலையூர், ராஜகீழ்ப்பாக்கம், கேம்ப் ரோடு, வேளச்சேரி வழியாக செல்லும் வகையில் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை அமைத்தால், சென்னை மெட்ரோ பணிகளுக்கும் சிக்கல் இருக்காது என்பதால் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications