மெட்ரோ ரயில் கட்டணம் அதிரடி குறைப்பு... விடுமுறை நாட்களில் 50% தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணத்தை குறைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இந்த கட்டண குறைப்பு நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணமான 70 ரூபாயை 50 ரூபாயாக ஆக குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கட்டணத்திலிருந்து 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
மெட்ரோ ரயிலை அண்ணாந்து பார்க்கும் மக்களுக்கு அதில் பயணிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் கட்டணத்தை கேட்டு பலரும் மலைத்து நின்று விடுவார்கள். சாமானிய மக்களும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயிலின் கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதாவது 0 - 2 கிமீ வரை கட்டணம் ரூ.10 எனவும், 2 முதல் 4 கிமீ வரை கட்டணம் ரூ. 20 ஆக தற்போது உள்ள நிலையில், இனி 2 முதல் 5 கிமீ வரை பயணக்கட்டணம் கட்டணம் ரூ. 20 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 12 கிமீ வரை பயணக்கட்டணம் ரூ.30 ஆக இருந்த நிலையில் இனி, 5 கிலோ மீட்டர் தூரம் முதல் 12 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க கட்டணம் ரூ.30 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 கி.மீ முதல் 18 கி மீ வரை பயணிக்க கட்டணம் ரூ. 50 ஆக இருந்த நிலையில் இனி 12 கிலோ மீட்டர் தூரம் முதல் 21 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க கட்டணம் ரூ.40 ஆக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
18 முதல் 24 கிமீ தூரம் வரை கட்டணம் ரூ.60, 24 கிமீ மேல் கட்டணம் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 21 முதல் 32 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க கட்டணம் ரூ.50 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பயணிக்கும் பயணிக்ளுக்கு ரயில் பயண கட்டணத்திலிருந்து 50% தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications