Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மெட்ரோ ரயில்.. தங்க முட்டை போடும் வாத்து.. செப்டம்பரில் நடந்த சூப்பர் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயிலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மற்ற பெருநகரங்களை ஒப்பிடும் போது, ஏராளமான மக்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆர்வமாக உள்ளார்கள். மிகச்சரியான நேரத்தில் ரயில்கள் இயங்குவது, மாற்றங்கள் இருந்தால் மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிப்பது, பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் தரமான சேவை வழங்குவது, தேவை அறிந்து ரயில்கள் அதிகப்படியாக இயக்குவது, நியாயமான கட்டணம் போன்ற காரணங்களால் பயணிகள் மெட்ரோ ரயிலை வெகுவாக விரும்புகிறார்கள். செப்டம்பர் மாதத்தில் 1.01 கோடி பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறுகையில், "செப்டம்பர் மாதத்தில் 1.01 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,01,46,769 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Chennai Metro Rail is goose that lays the golden eggs 1 01 crore passengers travelled in September

நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,59,587 பயணிகளும், மே மாதத்தில் 89,09,724 பயணிகளும், ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகளும், ஜூலை மாதத்தில் 1,03,78,835 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 99,09,632 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 04.09.2025 அன்று 3,97,217 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2025, செப்டம்பர் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 51,96,904 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 1,15,651 பயணிகள், க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 48,34,214 பயணிகள் (Single journey Paper QR /Token 20,90,664; Online QR - 1,32,408; Static QR 2,81,677; Whatsapp - 5,65,381; Paytm 4,08,832; ONDC - 9,25,180; PhonePe - 3,36,964; CMRL Mobile App 78,240; Chennai One App - 14,868) பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யூஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. " இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+