இந்திய மெட்ரோ வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவம்.. சென்னையில் நடந்த பொறியியல் அதிசயம்.. பின்னணி
சென்னை: இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொறியியல் சாதனையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் படைத்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் இரண்டாம் கட்டத்தில் இந்தியாவின் முதல் 33.33 மீ நீளமுள்ள U-கிர்டர் வழித்தடம் 5-ல் நிறுவப்பட்டது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் முதல் 33.33 மீ நீளமுள்ள U-கர்டர் சென்னை மெட்ரோ இரயில் கட்டம் II-ல் வழித்தடம் 5-ல் ராமாபுரத்தில் நிறுவப்பட்டது. இது இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பொறியியல் சாதனை ஆகும் மற்றும் இந்திய உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள், AEON மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர் L&T உடன் இணைந்து நாட்டின் முதல் 33.33 மீட்டர் நீளமுள்ள U-கர்டரை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இந்த மைல்கல் பொறியியல் சாதனை, இந்திய மெட்ரோ இரயில் திட்டங்களின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

225 மெட்ரிக் டன் எடையுடன் உருவாக்கப்பட்ட இந்த U-கர்டர், ஒரு முக்கியமான பொறியியல் சாதனையாகவும் மற்றும் கட்டுமான குழுவின் தொழில்நுட்ப திறன், புதுமை மற்றும் செயல்படுத்தும் திறன்களுக்கு ஒரு முக்கிய சான்றாகவும் உள்ளது.
பொதுவாக போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் U-டர்ன் பகுதிகளில், எதிர்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு நீளமான ஸ்டீல் கர்டரை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், L&T தலைமை அலுவலகம் முன்பு அமைந்துள்ள இந்த இடத்தில், ஸ்டீலுக்கு பதிலாக நீளமான U-கர்டரை பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், இந்திய மெட்ரோக்களில் இதுவே மிகவும் நீளமான U-கர்டர் ஆகும். மேலும், இது அழகியல் ரீதியாகவும் சிறப்பாக அமைந்துள்ளது .
இந்த முயற்சியின் முக்கிய சவால்கள் U-கர்டர்க்காண அச்சுகள் வடிவமைத்தல், அவை பாதுகாப்பாககொண்டு செல்லுதல் மற்றும் துல்லியமாக நிறுவுவது ஆகியவையாகும். இந்தப் பணி மூன்று ஸ்பான்களிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது, ஒவ்வொரு ஸ்பானிலும் இரண்டு கர்டர்கள் நிறுவப்பட்டன. மொத்தமாக 33.33 மீட்டர் நீளமுள்ள 6 U-கர்டர்கள்அமைக்கப்பட்டுள்ளன. இது சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் செயல்திறன், வடிவமைப்பு மற்றும் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது.
இந்த U-கர்டர்கள் உருவாக்கும் செயல்முறை சிக்கலான கம்பி கட்டமைப்பு (reinforcement), முன் இழுவை முறை (pre-tensioning), மற்றும் மிக உயர்ந்த தரக் கட்டுப்பாட்டு நிலைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த கர்டர்கள் காஸ்டிங் யார்டிலிருந்து நிறுவும் இடத்துக்குக் கொண்டு செல்லும் பணிக்கு, மிகச் சீரான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு தேவைப்பட்டது.
இந்த U-கர்டர், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 6+6 அச்சுகளைக் கொண்ட மல்டி-ஆக்சில்டி ரெய்லர்களை பயன்படுத்தி, Volvo FH 520 HP வாகனம் மூலம் இடமாற்றப்பட்டது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், கூடுதல் பொதுமேலாளர் .சி.முரளி மனோகரன் (உயர்மட்ட கட்டுமானம்), துணை பொது மேலாளர் .ஏ.ராமகிருஷ்ணன் (கட்டுமானம்), திருமதி. கே.பவானி - EVP & IC தலைவர்/ஹெவி சிவில் இன்ஃப்ரா, .கே. கிருஷ்ணபிரபாகர் - திட்ட பொறுப்பு L&T, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் L&T நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications