மேலே மெட்ரோ.. கீழே பாலம்.. ஏர்போர்ட் டூ கிளாம்பாக்கம்.. நடக்க போகும் பொறியியல் அதிசயம்.. செம!
சென்னை: சென்னை ஜிஎஸ்டி சாலையில் மெட்ரோ உடன் சேர்த்து இரண்டு அடுக்கு பாலமும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனம் சார்பாக ஏர்போர்ட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. இந்த விரிவாக்கத்திற்காக 60 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் செயல்முறையை மெட்ரோ தொடங்கி உள்ளது. 15.5 கிமீ தூரத்திற்கு சென்னை விமான நிலையத்தை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் (KCBT) இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது
இந்த ஜிஎஸ்டி சாலையில் மெட்ரோ உடன் சேர்த்து இரண்டு அடுக்கு பாலமும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலே உள்ள மட்டத்தில் மெட்ரோ பாதை, முதல் மட்டத்தில் உயர்த்தப்பட்ட சாலை அமைக்கப்படும். அதாவது முதல் மட்டத்தில் வாகனங்கள் செல்லலாம். இரண்டாம் கட்டத்தில் மெட்ரோ செல்லும். கிளாம்பாக்கம் வரை இந்த பாலம் அமைக்கப்படும். ஆனால் ஏற்கனவே பல்லாவரம் பகுதியில் பாலம் இருப்பதால்.. அந்த பாலம் முடிந்த பின்.. சில மீட்டர்கள் கழித்து இந்த இரண்டு அடுக்கு பாலம் அமைக்கப்படலாம்.
இந்த மெட்ரோ பெரும்பாலும் ஜிஎஸ்டி சாலையைப் பின்பற்றி அதே ரூட்டில் அமைக்கப்படும். இதனால் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைகள் இருக்காது. இந்த திட்டத்திற்கு தேவையான 28 ஏக்கர் தனியாருக்கு சொந்தமானது என்றும், மீதமுள்ள 30 ஏக்கர் பல்வேறு அரசு துறைகளுக்கு சொந்தமானது என்றும் CMRL உறுதி செய்துள்ளது. பல்லாவரம் மற்றும் பெருங்குளத்தூர் அருகே உள்ள தனியார் நில உரிமையாளர்களுடனும், விமான நிலையம் அருகே உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலத்தை பெறவும் மத்திய அதிகாரிகளுடனும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இன்னொரு பக்கம் பூந்தமல்லியில் இருந்து பாரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் இணைப்புக்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.,43.63 கி.மீ.தொலைவுக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு, நான்கு நிறுவனங்கள் ஏலம் சமர்ப்பித்துள்ளன.
ஒரு வருடத்தில் திட்டம் தயாராகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். டிபிஆரில் மெட்ரோவின் சரியான நீளம், நிலையங்களின் எண்ணிக்கை, நடைபாதையின் வகை (நிலத்தடி/உயர்த்தப்பட்ட/அட்-கிரேடு), ரயிலின் வகை மற்றும் மொத்த செலவு போன்ற விவரங்கள் இருக்கும்.
மெட்ரோ சென்னை
அதன்பின் இதற்கான அனுமதி பெறப்பட்டு பணிகள் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மக்களின் துரித போக்குவரத்திற்கான மெட்ரோ பயண சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. பரந்தூரில் மொத்தம் 2 மெட்ரோ நிலையங்கள் வர உள்ளன. உள்ளூர் விமான நிலைய பகுதிக்கு அருகே ஒரு ஸ்டேஷன், சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஸ்டேஷன் என்று இரண்டு ஸ்டேஷன்கள் வர உள்ளன.
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை பெருந்திரள் மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) பரிந்துரைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையின் (DFR) முன்மொழியப்பட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
1. வழித்தடத்தின் மொத்த நீளம்: 43.63 கி.மீ
2. பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள்: 19 (தோராயமாக)
3. மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ 10,712 கோடி (தோராயமாக)
பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பெருந்திரள் மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பரிந்துரைக்கிறது. விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள் மற்றும் நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications