சென்னை மெட்ரோ ‘செம’ ஐடியா.. தூண்களில் விளம்பரம்.. எக்ஸ்ட்ரா வருவாய் ஈட்ட புது பிளான்! டீல் ஓகே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் வழித்தட தூண்களில் விளம்பர பலகை வைத்து மாற்று வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் 7 மெட்ரோ நிலையங்கள் செயல்படத் தொடங்கின. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான வழித்தடத்திலும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலும் 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.

chennai metro train

பின்னர் படிப்படியாக சென்னை மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டு, தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாற்று வருவாய் ஈட்டும் முயற்சியாக மெட்ரோ ரயில் தூண்களில் விளம்பர பலகை வைத்து, அவற்றில் விளம்பரம் செய்ய டெண்டர் விட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம். மீனம்பாக்கம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு மெட்ரோ வழித்தட தூண்களில் விளம்பரம் செய்வதற்கான உரிமைகள் முத்ரா வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

chennai metro train

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், நிலையான தன்மை மற்றும் மாற்று வருவாய் ஈட்டுதல் செயல்பாடுகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, மீனம்பாக்கம் மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் சின்னமலை மெட்ரோ மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ முதல் கோயம்பேடு மெட்ரோ வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்வதற்கான உரிமைகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னையை சேர்ந்த Mudra Ventures நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.


இது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் முக்கிய மாற்று வருவாய்களான விளம்பரம், சில்லறை வணிகம் மற்றும் அலுவலக பணி இடங்கள் வழங்குவதன் மூலமாகவும் இயக்க செலவுகளை ஈடு செய்ய மேலும் உதவுகிறது.


மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்யும் உரிமைகளுக்கான ஒப்பந்தத்தை விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+