Chennai Update: பயணிகளின் கனிவான கவனத்திற்கு! மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்! பொங்கல் நேரத்தில் வெளியான அறிவிப்பு!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். மேலும் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால், அதிகம் பேர் சென்னை மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். சென்னைவாசிகள் 15ஆம் தேதிக்கு முன் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விடுவர் என்பதால், 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.
தற்போது சென்னையில் நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நீல வழித்தடத்தில் சென்னை விம்கோ நகரில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலும், பச்சை நிற வழித்தடத்திலும் சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகிறது.
தற்போது சென்னை எழும்பூர் விமான நிலையம், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பொங்கல் பண்டியைகையொட்டி சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

சென்னை மெட்ரோ
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். மேலும் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால், அதிகம் பேர் சென்னை மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். வழக்கமாக தீபாவளி, பொங்கல், போன்ற அரசு விடுமுறை தினங்களில் சென்னை மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் , வழக்கம் போல் ஞாயிறு அட்டவணைப்படியே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகை
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, ஜனவரி 15, 16 மற்றும் 17, 2026 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும். சென்னை மெட்ரோ தனது ரயில் சேவைகளை வழக்கமாக காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்குகிறது.
பொங்கல் விடுமுறை
காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், இரவு 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் மெட்ரோ ரயில்கள் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். 3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மேலும், இரவு 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
ஞாயிறு கால அட்டவணை
பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ ரெயில் சேவையை உறுதிப்படுத்த, அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது.
-
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications