Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம்: டெல்லி மெட்ரோவுடன் முக்கிய டீல்! 12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 118.9 கி.மீ தூரத்தை இயக்கி, பராமரிக்க 12 ஆண்டுகளுக்கு டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரூ.5,870 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் கையெழுத்தாகி உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஜூன் 2015 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவையை சென்னையில் துவங்கியது. அதைத்தொடர்ந்து படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில், முதல் கட்ட மெட்ரோ திட்டத்தில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் 3.1 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். பண்டிகை நாட்களில் இன்னும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர்.

Chennai Metro Signs 5 870 Crore Deal with DMRC for Phase 2 Operations amp amp Maintenance

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. Phase II திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்று புதிய வளர்ச்சி வங்கி ஆகியவை நிதியுதவி அளிக்கின்றன.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5 மாதவரம் பால் பண்னையில் தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்தில் 5 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டெல்லி மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் பராமரிப்பு பணிமனைகள் உட்பட 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரூ. 5,870 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம் 3 (மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் II மெட்ரோ வரை), வழித்தடம் 4 (கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை) மற்றும் வழித்தடம் 5 (மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை) ஆகிய மூன்று வழித்தடங்கள் மற்றும் மாதவரம், பூந்தமல்லி மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள பராமரிப்பு பணிமனைகள் உட்பட 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் (Letter of Acceptance) டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரூ. 5,870 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.

Chennai Metro Signs 5 870 Crore Deal with DMRC for Phase 2 Operations amp amp Maintenance

இதற்கான ஏற்பு கடிதத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர். விகாஸ் குமாரிடம் இன்று (02.04.2025) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். அமித் குமார் ஜெயின் (இயக்கம் மற்றும் சேவைகள்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பணியின் நோக்கம், மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் உள்ள 3 வழித்தடங்கள், மூன்று பராமரிப்பு பணிமனைகள் மற்றும் பயணிகளுக்கு சேவைகளை வழங்குதல் உட்பட இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து பணிகளும் இதில் அடங்கும். இதற்கான ஒப்பந்த காலம், இரண்டாம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியில் இருந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும். டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிகள் திருப்திகரமாக இருப்பின் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+