சென்னை மெட்ரோ எடுத்த பிரம்மாஸ்திரம்.. ஆங்காங்கே முளைக்க போகும் பிரம்மாண்ட கட்டிடங்கள்! ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ நிர்வாகம் சார்பாக மெட்ரோ கட்டுமானத்திற்கு இடையே கூடுதலாக மேலும் சில கட்டுமானங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் பல மாடிக் கட்டிடங்களை கட்டி அதை வாடகைக்கு விடும் முடிவை எடுத்துள்ளது. ஆலந்தூரில் இதற்காக பிரம்மாண்ட கட்டிடம் ஒன்றும் வர போகிறதாம்.

Chennai Metro to develop Detailed Project Report for property developments under Transit Orient Development

இதற்கான பணிகள் வரும் நாட்களில் தொடங்கும் என்கிறார்கள். மெட்ரோ மூலம் கட்டப்படும் இந்த கட்டிடங்கள் அலுவலகம் அல்லது சில்லறை வர்த்தக இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களாகப் பயன்படுத்தப்படும். கட்டம் I திட்டத்தில் சில நிலையங்களில் கடைகள், கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்கான சிறிய இடங்களை CMRL ஏற்கனவே வாடகைக்கு விட்டுள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CRML) வருவாயை அதிகரிக்க நிலையங்களுக்கு அருகில் கட்டிடங்களை கட்டி அலுவலகம் அல்லது சில்லறை இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களாக வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளது.

பணிகள்: அதன் ஒரு கட்டமாக, மெட்ரோ திட்டத்தில் முக்கிய வழிகளில் டிரான்ஸிட் ஓரியண்ட் டெவலப்மென்ட்டின் கீழ் சொத்து மேம்பாடுகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான டெண்டர் எடுக்கப்படுகிறது. (ஏக்கர் பரப்பளவில்)
பெருங்குடி (OMR) : 0.78
கரப்பாக்கம் (OMR) : 0.55
மேட்டுக்குப்பம் (OMR) : 0.8
சொல்லிங்கநல்லூர் (OMR இல்) : 0.61
ஒக்கியம் தொரைப்பாக்கம் (OMR) : 0.64 & 0.86 ஏக்கர் நிலப்பரப்புகள்
நேரு நகர் : 2.44
மாதவரம் : 0.91

சிஎம்ஆர்எல் அதிகாரிகளின் கூற்றுப்படி, 54 கிமீ மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை தினசரி 2.97 லட்சம் பேர் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், டிக்கெட் கட்டணத்தை மட்டுமே நம்பாமல் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறிவது முக்கியம்.

ஆலந்தூர் கட்டிடம்; சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆலந்தூர் மெட்ரோ ரயில் வளாகத்தில் சொத்து மேம்பாட்டிற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஏலங்களை விடுத்தது உள்ளது. . திட்டத்தில் Ph-1 & Ph-2 நிலையங்கள் இரண்டையும் இணைக்கும் ஸ்கைவாக், UG பார்க்கிங், பிளாசா, சில்லறை & அலுவலக இடங்கள் ஆகியவை அடங்கும்.

இங்கே இதற்காக பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கட்டம் I திட்டத்தில் சில நிலையங்களில் கடைகள், கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்கான சிறிய இடங்களை CMRL ஏற்கனவே வாடகைக்கு விட்டுள்ளது. மெட்ரோ நிர்வாகம் இப்போது பல மாடிக் கட்டிடங்களைக் கட்டி வாடகைக்கு விட விரும்புகிறார்கள். அரும்பாக்கம், நேரு பூங்கா, சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களில் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேரு பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில், 5,264 சதுர மீட்டர் பரப்பளவில், ஒன்பது தளங்கள் கொண்ட கோபுரம் கட்டப்படும். இந்த இடங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான ஏலத்தை முன்வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், இது பெரும்பாலும் அலுவலகங்களாகப் பயன்படுத்தப்படும். சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில், இரண்டு மாடி கட்டடம் கட்ட திட்டமிட்டு, அதை வணிக வளாகமாக, இயற்கையான சூழ்நிலையில் மற்றும் தோட்டக்கலைப் பணிகளுடன் உருவாக்க உள்ளனர். சுவாரஸ்யமாக, இந்த கட்டிடம் சைதாப்பேட்டையில் உள்ள சுரங்கப்பாதையின் மீது வரும், மேலும் திட்டத்திற்கான ஏலத்தை மெட்ரோ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில், CMRL நிறுவனம் 1,666 சதுர மீட்டர் இடத்தைக் கண்டறிந்து, 3,142 சதுர மீட்டர் பரப்பளவில் ஏழு மாடிக் கட்டடம் கட்டத் திட்டமிட்டுள்ளது. இதற்கான விவாதங்களை மெட்ரோ நடத்தி வருகிறது, மேலும் இந்த இடத்தை கேமிங் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய மினி-மால் அல்லது பொழுதுபோக்கு மையமாக மாற்றுவதற்கான திட்டங்கள் உள்ளன. டெண்டர் இப்போது மதிப்பீட்டில் உள்ளது, விரைவில் திட்டத்தை இறுதி செய்வோம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

திட்ட அறிக்கை; சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை விரிவுபடுத்தும் விதமாக இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய நிலையங்கள்: இந்த நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் 3ல் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4,058.20 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டு உள்ளது. புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை விட ஆகஸ்டு மாதத்தில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 215 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது:- நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும், ஜூலை மாதத்தில் 82,53,692 பயணிகளும் மற்றும் ஆகஸ்டு மாதத்தில் 85,89,977 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+