சென்னை மெட்ரோ பயணிகளுக்கு புது அனுபவம்.. இந்த 3 ஸ்டேஷன்கள் தலைகீழாக மாற போகுது! ஜாக்பாட் அறிவிப்பு
சென்னை: சென்னை மெட்ரோவில் பயணிக்கும் மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பயணிகளைக் கவரச் சென்னை மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இன்னும் சில மாதங்களில் 3 மெட்ரோ நிலையங்களில் தலைகீழ் மாற்றம் நடக்கப் போகிறது. இது பயணிகள் வருகையைப் பல மடங்கு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இப்போது இரண்டு ரூட்களில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர 3 ரூட்களில் இப்போது புதிதாக மெட்ரோ கட்டுமானம் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த கட்டுமானங்கள் முழுமையாக நிறைவடைந்தால் நகரில் மிகவும் விரிவான ஒரு மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை கொண்ட ஒரு நகரமாகச் சென்னை மாறிவிடும்.
சென்னை மெட்ரோ: சென்னையில் மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், பொதுமக்களைக் கவர மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே இன்னும் சில மாதங்களில், சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் தங்களுக்குத் தேவையான தினசரி மளிகை பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை மெட்ரோ நிலையத்திலேயே ஈஸியாக வாங்கிக் கொள்ள முடியும்.
நம்ம சென்னை மெட்ரோவில் விரைவில் மூன்று மெட்ரோ நிலையங்களில் லுலு ஹைப்பர் மார்க்கெட் விரைவில் திறக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக ஷெனாய் நகர் மற்றும் சென்னை சென்ட்ரலில் உள்ள ஹைப்பர் மார்க்கெட்கள் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் விம்கோ நகரிலும் மெட்ரோ நிலையம் திறக்கப்படும்.
எது பெரியது: இதில் திரு. வி.க. பூங்காவிற்கு கீழே அமைந்துள்ள ஷெனாய் நகர் மெட்ரோ நிலையத்தில் அமையும் லுலு ஹைபர் மார்கெட் தான் மிகப் பெரியதாக இருக்கும். இது மெட்ரோ ரயில் பயணிகளுக்குத் தனித்துவமான ஒரு அனுபவத்தைத் தரும் என்கிறார்கள்.
அதிகாரிகள் தகவல்: இது குறித்து சிஎம்ஆர்எல் அதிகாரிகள் கூறுகையில், "இதற்காக கிரேஸ் சர்வீசஸ் நிறுவனம் லுலு குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே இப்போது பல ஸ்டேஷன்களில் சில உணவு ஸ்டால்கள் மட்டும் உள்ளன. ஆனால், லுலு ஹைப்பர் மார்க்கெட் அமைந்தால் அது மக்கள் கூட்டத்தை ஈர்க்கும். ரயில் நிலையம் போன்ற இடங்களில் ஹைப்பர் மார்கெட் அமைவது பயணிகளுக்கும் சாதகமாக இருக்கும்.
ஷெனாய் நகரைப் பொறுத்தவரை அங்கு மெட்ரோ நிலையம் பூமிக்கு அடியில் அமைந்துள்ளது. மேலே திரு.வி. க பூங்கா கடந்தாண்டு பிப். மாதம் திறக்கப்பட்ட நிலையில், அது குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி மைதானம் எனப் பல வசதிகளைக் கொண்டுள்ளது. பக்கத்தில் புதிய ஸ்டிடேயமும் கட்டப்படுகிறது" என்கிறார்கள்.
திட்டம் என்ன: இது குறித்து கிரேஸ் சர்வீசஸ் உரிமையாளர் ஜி சார்லஸ் வசந்தகுமார் கூறுகையில், "ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுமார் 1 லட்சம் சதுர அடியில் ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்படும். அதேபோல சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலும் டிக்கெட் வழங்கும் பகுதியில் 40,000 சதுர அடி பரப்பளவிற்கும், விம்கோ நகர் டிப்போ ஸ்டேஷனில் 60,000 சதுர அடியிலும் ஹைப்பர் மார்கெட் கட்டப்படும்.
இதில் ஷெனாய் மெட்ரோ என்பது அப்பகுதி மக்களுக்கு அதிகம் பயன்படும் என்று எதிர்பார்க்கிறோம். சென்னை சென்ட்ரல் என்பது குடியிருப்பு பகுதி இல்லை. எனவே, ரயில் பயணிகள் தான் ஹைப்பர் மார்கெட்டை அதிகம் பயன்படுத்துவார்கள். அதேபோல விம்கோ நகரிலும் ரயில் பயணிகளே இதை அதிகம் பயன்படுத்துவார்கள் என நினைக்கிறோம். இதற்கான கட்டுமானம் ஜூலை மாதம் தொடங்கி நடந்து வருகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு அனைத்து ஹைப்பர் மார்கெட்களையும் திறக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications