ஆகா பெரிய கை ஆச்சே! தட்டி தூக்கிய ஸ்டாலின்.. மெட்ரோ பயணிகளுக்கு வந்த முக்கியமான நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வரும் நிலையில், முக்கியமான சில மெட்ரோ நிலையங்களை அமைக்க டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி டாடா நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ நிறுவனம் ரூபாய் 1,204. 87 கோடி வழங்கியுள்ளது. ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ், கெல்லிஸ் உள்ளிட்ட 4 இடங்களில் ரயில் நிலையங்கள் கட்ட டாடா திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இங்கே பூமிக்கு கீழே மெட்ரோ பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தரையோடு தரையாக இருக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் இங்கே அமைக்கப்பட உள்ளன.

Chennai Metro Train 2nd phase corridor station contracts awarded to Tata by CMRL

மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் மற்றும் செம்பியத்தில் உள்ள பெரம்பூர் மெட்ரோ கிராஸ்ஓவர் உள்ளிட்ட நான்கு நிலையங்களுக்கான ஒப்பந்தம் கடந்த வாரம் தினேஷ்சந்திரா-சோமா நிறுவனத்திற்கு ₹1,063.37 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது டாடா நிறுவனத்திற்கு அடுத்த கட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

முன்னதாக
இதற்கான ஏற்பு கடிதம் தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்திற்கு 02.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் மற்றும் செம்பியத்தில் பெரம்பூர் மெட்ரோ கிராஸ்ஓவர் நிலையம் என நான்கு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மாதவரம் பால்பண்ணை மற்றும் முராரி மருத்துவமனை (மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ) ஆகிய இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் தி. அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரணவ் குமார் (தொழில்நுட்பம்) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு).

கூடுதல் பொது மேலாளர் டி. குருநாத் ரெட்டி (ஒப்பந்த கொள்முதல்), இணை பொது மேலாளர் ரீபு டாமன் துபே (சுரங்கப்பாதை), மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்., என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மெட்ரோ: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.

இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

116 கிமீ இரண்டாம் கட்ட திட்டம் ₹61,843 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும்.

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+