கல்லூரி மாணவர்களுக்கு சவால்.. சென்னை மெட்ரோ நடத்தும் கிரியேட்டிவ் டிசைன் போட்டி.. பரிசுகளை அள்ளுங்க!
சென்னை: மெட்ரோ இரயிலை பயன்படுத்தி உங்கள் பணத்தையும் நேரத்தையும் சேமியுங்கள் என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான கிரியேட்டிவ் டிசைன் போட்டியை நடத்துவதாக அறிவித்துள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் "மெட்ரோ இரயிலை பயன்படுத்தவும் - உங்கள் பணத்தையும் நேரத்தையும் சேமிக்கவும்"என்ற கருப்பொருளை மையமாக கொண்டு கிரியேட்டிவ் டிசைன் போட்டியை நடத்துகிறது. கல்லூரி மாணவர்கள் சென்னை மெட்ரோ இரயில் சேவைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவர்களின் ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டை ஊக்குவிக்கவும் மற்றும் மேம்படுத்துவதே போட்டியின் நோக்கமாகும்.

இந்த முயற்சி மாணவர் சமூகம் மத்தியில் சென்னை மெட்ரோ இரயில் சேவை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான ஒருபடியாகும். இது ஒரு வெளிப்படையான போட்டி மற்றும் இதற்கான பதிவு ஆன்லைன் படிவம் மூலம் பதிவு செய்யப்படும். இதற்கான படிவம் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுடன் பகிரப்படும்.
இந்த போட்டிக்கான பதிவுக் காலம் ஜனவரி 23, 2024 முதல் பிப்ரவரி 22, 2024 வரை.
• தகுதி: சென்னையில் உள்ள அனைத்து வழக்கமான இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மட்டுமே.
• கருப்பொருள்: "USE CMRL - Save Your Money & Time"
• வடிவங்கள்: வீடியோக்கள், அனிமேஷன்கள், ஆடியோ காட்சிகள் அல்லது GIF-கள் (30-60 வினாடிகள்)

• பரிசுகள்: 1-வது: ரூ.15,000, 2-வது: ரூ.10,000, 3-வது: ரூ.5,000
• பதிவு: ஜனவரி 23, 2024 முதல் பிப்ரவரி 22, 2024 வரை.
•ஆன்லைனில் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeMIyLJiSk9Lrq7vzydKr2kgcZRTuFPw30NAxZmVzYnEdiWCw/viewform என்ற இணைப்பில் பதிவு செய்யவும் அல்லது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணையதளத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
• தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் உடனான சந்திப்பு கூட்டம்: பிப்ரவரி 29, 2024 (விவரங்கள் - சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணையதளத்தில்)
• சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு: மார்ச் 31, 2024
• வெற்றியாளர்கள் அறிவிப்பு: ஏப்ரல் 14, 2024.
மேலும் விவரங்களுக்கு, [email protected] என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும். ("Creative Design Competition for Students" என்ற தலைப்பில் (Subject) உள்ள மின்னஞ்சல் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும், மேலும் பதில் அனுப்பப்படும்).
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications