சென்னைக்கு ‘சூப்பர்’ நியூஸ்! ஆவடி வரை வருது மெட்ரோ ரயில்.. இடையே 15 ஸ்டேஷன்கள்.. எல்லாம் ரெடி!
சென்னை: கோயம்பேடு முதல் ஆவடி வரை சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் வழித்தடம் 5-ல் கோயம்பேடு-ஆவடி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ல் தொடங்கப்பட்டது. படிப்படியாக சேவை நீட்டிக்கப்பட்டு, தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாதவரம் - சிறுசேரி சிப்காட், மாதவரம் - சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் - சோழிங்கநல்லூர் இடையே 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் தற்போது சுரங்கப்பாதை பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது.
Detailed Feasibility Reports (DFR) for recommending Metro Rail for the Extension of Corridor 5 of Chennai Metro Phase II from Koyambedu to avadi via Thirumangalam , mugappair and Extension of Corridor 3 of Chennai Metro Phase II from siruseri to kilambakkam Bus Terminus… pic.twitter.com/dteqY0dd6W
— Chennai Metro Rail (@cmrlofficial) September 20, 2023
இந்நிலையில் சென்னை மெட்ரோ திட்டம் - 2 விரிவாக்க பணிகளுக்கான சாத்தியக் கூறு அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோயம்பேடு - ஆவடி, சிறுசேரி - கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்க்கான சாத்தியக் கூறு அறிக்கை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஃபேஸ் 2 - வழித்தடம் 5ல் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ நீளத்திற்கு தோராயமாக 15 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் ரூ.6,376.18 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயிலை நீட்டிப்பதற்கு மெட்ரோ நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
அதேபோல, வழித்தடம் 3-ல் சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை 23.5 கி.மீ நீளத்திற்கு தோராயமாக 12 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் ரூ.5,458.06 கோடி மதிப்பீட்டில் நீட்டிப்விரிவான சாத்தியக்கூறு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறுசேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை மேற்குறிப்பிடப்பட்டுள்ளபடி முன்மொழியப்பட்ட இடத்தில் மெட்ரோ அமைப்பிற்கான பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால், தற்போதைக்கு மேம்படுத்தப்பட்ட மாநகர பேருந்து சேவைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பரிந்துரை செய்கிறது.
இரண்டாம் கட்டத் திட்டப்பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர், கணிசமான தொழில்துறை மற்றும் குடியிருப்பு மேம்பாடுகளைக் கொண்ட திருப்போரூர், மாமல்லபுரம் வழியாக கேளம்பாக்கத்தின் தெற்கு விரிவாக்கத்தில் மேலும் ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது என்றும் சாத்திய கூறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னையில் நடக்கும் 500 மீட்டர் மேஜிக்.. குறி வைக்கப்பட்ட 41 இடங்கள்.. மக்களுக்கு அடிக்கும் ஜாக்பாட் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications