Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்.. டிஜிட்டல் டிக்கெட்டுக்கு 20% தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் டிஜிட்டல் டிக்கெட் வசதியை (store value pass) பயன்படுத்தினால் 20 சதவீதம் தள்ளுபடியில் பயணம் செய்யலாம் என்றும், இதனை வாகன நிறுத்துமிடங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் மக்கள்தொகை

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் பிரதான பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல நீண்ட நேரம் தேவைப்படுகிறது. மக்கள் தொகையோடு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

chennai-metro-train-get-20-percent-discount-on-fares-on-chennai-metro-if-you-use-digital-ticket

இதனால், பெரும்பாலும் சென்னைவாசிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவையானது வழங்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ

சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்ட நிலையில், முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 2015-ம் ஆண்டில் அமலுக்கு வந்தன. ஆரம்பத்தில் குறைவான மக்கள் மட்டுமே மெட்ரோ ரயிலைப் பயயன்படுத்திய நிலையில், தற்போது பெரும்பாலான மக்கள் மெட்ரோவை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். தொடர்ந்து, புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, மெட்ரோ ரயில் டிக்கெட் சலுகை தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, டிஜிட்டல் டிக்கெட் வசதியைப் பயன்படுத்துவோருக்கு 20 சதவீதம் பயண சலுகை அளிக்கப்பட்டு்ளது.

டிஜிட்டல் டிக்கெட்

இதுகுறித்து சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2022 ஆண்டு நவம்பா் முதல் டிஜிட்டல் பயணச் சீட்டை (எஸ்விபி) அறிமுகப்படுத்தியது. அனைத்து மெட்ரோ பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கைபேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்வதன் மூலம் டிஜிட்டல் பயணச்சீட்டு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

டிஜிட்டல் பயணச்சீட்டு வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைபேசி செயலி மூலம் மட்டுமே வாங்க முடியும். அதில் ரீசாா்ஜ் செய்யப்பட்ட இறுதி நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை டிஜிட்டல் பயணச்சீட்டு செல்லுபடியாகும்.

20 சதவீதம் தள்ளுபடி

டிஜிட்டல் பயணச்சீட்டின் மூலம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவா்கள் தங்களது பயணக் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடியை பெறலாம். இந்தப் பயணச்சீட்டு வசதியில் குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.3,000 வரை டாப்அப் (ரீசாா்ஜ்) செய்து கொள்ளலாம். பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணத் தொகை கழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+