அடையாறு ஆற்றில் உள்ளே புகுந்து காவிரி.. இது எப்படிங்க நடந்தது? சென்னையில் நடந்த சுவாரசிய சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மெட்ரோ பணிகள் நடந்து வரும் நிலையில் புதிய சுவாரசிய சம்பவம் ஒன்று அடையாறு ஆற்றில் நடந்து உள்ளது.

சென்னை மெட்ரோ திட்டம் ஒரு பெரிய சாதனையை கொண்டாடுகிறது. நேற்று (30.12.2023),"காவிரி" சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக அடையாறு ஆற்றின் அடியில் நுழைந்து சுரங்கம்தோண்டும் பணியை தொடங்கியது. காவிரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் தற்போது அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணிகளை தொடங்கி உள்ளது.

Chennai Metro works for underground tunnel starts in Adyar River Front


மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-3-இல் ஒப்பந்தம் TU02 (கெல்லிஸ் முதல் தரமணி வரை) சுரங்கப்பாதை கட்டுமான பணிகள், 16.02.2023 அன்று தொடங்கியது. "காவிரி" மற்றும் "அடையாறு" என இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரை 1.226 கி.மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது.

இதில் "காவிரி" சுரங்கம் தோண்டும் இயந்திரம் 583 மீ. சுரங்கம் தோண்டும் பணியை முடித்து தற்போது வெற்றிகரமாக அடையாறு ஆற்றில் நுழைந்து அடியில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியுள்ளது. "அடையாறு" சுரங்கம் தோண்டும் இயந்திரம், 250 மீ. தொலைவில் நெருக்கமாகப் பின் தொடர்ந்து 20 நாட்களுக்குள் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கும். இந்த இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திரு.வி.க. பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து அடையார் சந்திப்பு நிலையத்தை வந்தைடையும்.

சென்னை மெட்ரோ: இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமைபொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்த்தனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமைபொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமானநிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரைமெட்ரோ ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+