அசத்தலான முடிவு.. சென்னையில் உள்ள பெண்கள், மாணவ, மாணவியருக்கு குட் நியூஸ்.. இனி ஈஸியா பயணிக்கலாம்
சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி), நகரெங்கும் உள்ள பெண்கள் மற்றும் மாணவியருக்கு மகிழ்ச்சியான செய்தியாக, அதிக பெண் பயணிகள் பயன்படுத்தும் வழித்தடங்களில் 50 மகளிர் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கென பிரத்யேக பேருந்துகளையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நகரில் பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் போன்ற நன்கு வளர்ச்சியடைந்த பொதுப் போக்குவரத்து இருந்தபோதிலும், பேருந்துகளே பரவலாகப் பயன்படுத்தப்படும் போக்குவரத்து முறையாக உள்ளது. எம்டிசி தினமும் 27 பணிமனைகளில் இருந்து 3,233 பேருந்துகளை இயக்குகிறது, இதன் மூலம் சுமார் 40 லட்சம் பயணிகள் பயனடைகின்றனர்.

இருப்பினும், நகரப் பேருந்துகள் பெரும்பாலும் நெரிசலாகவே இருக்கின்றன, குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான நெரிசல் மற்றும் அசௌகரியம் ஏற்படுகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பயணம் செய்வது சவாலாக இருப்பதாகப் பல பெண் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, எம்டிசி 50 சிறப்பு பேருந்து சேவைகளை மாணவர்களுக்காகவே அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் நெரிசலான பேருந்துகளில் சிக்கித் தவிக்காமல், படிக்கட்டுகளில் தொங்காமல் பாதுகாப்பாக பயணிக்க முடியும். இந்த பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று வரும் வகையில் இயக்கப்படும்.
இந்த முயற்சிக்கு சுமார் 25 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன, இதில் நான்கு கல்லூரிகள் அடங்கும், பெரும்பாலானவை பெண்கள் மட்டுமே பயிலும் மேல்நிலைப் பள்ளிகள் ஆகும். பெண்கள் மட்டும் பயணிக்கக்கூடிய பேருந்துகள் மற்றும் மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து சேவைகளை செயல்படுத்த எம்டிசி மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
பேருந்து சேவை
சென்னையில் போக்குவரத்தை எளிமையாக்க புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையில் மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் புதிய செயலியை அடுத்த மாத இறுதியில் அறிமுகம் செய்கிறது CUMTA. இந்த செயலி மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு எப்படி செல்ல வேண்டும், எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் APP-ல் இடம் பெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் விடப்பட்ட நிலையில், அந்த பணிகள் முடிந்துள்ளன.
QR கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பஸ் டிக்கெட்
அதன்படி முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு ஜூலை முதல் வாரத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை கொண்டு வரப்பட உள்ளது. வரும் நாட்களில் மற்ற நகரங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சென்னையில் உள்ள பேருந்துகளில் எல்லாம் பயணிகள் தகவல் அமைப்பு வழங்கப்படும். அதாவது பேருந்துகளில் தானியங்கி மூலம் எந்த நிறுத்தம் என்ற அறிவிப்பு வெளியிடப்படும். இது போக உலக வங்கி மற்றும் ஜேர்மன் வங்கியான KfW ஆகியவற்றிலிருந்து நிதியுதவியுடன் 1,500 மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாக இயக்குனர் கூறுகிறார்.
சென்னை மாநகர மதிப்பீட்டின்படி, சென்னை மாநகரப் போக்குவரத்து அமைப்புக்கு மொத்தம் 5,000 பேருந்துகள் தேவைப்படுவதாகவும், இதனால் பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும் MTC நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய டிக்கெட் முறை: இது போக மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மார்ச் முதல் வாரத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி விரைவில் பயணிகளுக்கு பயணிகள் தகவல் அமைப்பு (பிஐஎஸ்) வழங்கப்படும். அதேபோல் தானியங்கி டிக்கெட் அமைப்பும் வழங்கப்படும். பேருந்துகளில் இருக்கும் கருவி ஒன்றை ஸ்கேன் செய்து நாம் டிக்கெட் எடுக்கலாம். மாநகர பேருந்து கார்டுகள் எதிர்காலத்தில் வழங்கப்படும். அதை இதில் டேப் செய்தும் டிக்கெட் எடுக்கலாம்.
நாம் செல்லும் தூரத்திற்கு ஏற்றபடி டிக்கெட் வழங்கப்படும். வெளிநாடுகளில் இப்படி டேப் செய்யும் முறை ஏற்கனவே அமலில் உள்ளது. அதே முறை சென்னையிலும் கொண்டு வரப்பட உள்ளது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications