என் மனைவியுடன் நீ எப்படி பேசுவாய்.. கழுத்தை அறுத்து.. சென்னையில் நடந்த கொடூரம்.. சிசிடிவி காட்சி!
சென்னை: சென்னை புதுப்பேட்டை அருகே மது போதையில் இருந்த நண்பர்கள் சக நண்பனை என் மனைவியுடன் நீ எப்படி பேசலாம் என்று கூறியபடி கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Recommended Video

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் சந்தோஷ். புதுப்பேட்டையில் மீன்பாடி வண்டி ஓட்டும் கூலி வேலை செய்து வந்தார்.
சந்தோஷுக்கு மனைவி இறந்த நிலையில் ஒரு மகன் மட்டும் அவரது அத்தை வீட்டில் தங்கி வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு அங்குள்ள தனது மீன்பாடி வண்டியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

மது போதையில் தகராறு
இந்த நிலையில் சந்தோஷின் நண்பர்களான இளவரசன் மற்றும் அருண்குமார் ஆகியோர் அங்கு வந்துள்ளார். அப்பொழுது மூன்று நபர்களும் மது போதையில் இருந்துள்ளனர். திடீரென அருண் மற்றும் இளவரசன் ஆகியோர் சந்தோஷ் குமாரை தனது மனைவியுடன் நீ எப்படி பேசுவாய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பலத்த காயம்
ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த அருண் குமார் மற்றும் இளவரசன் ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோஷின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

பலத்த காயம்
ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த அருண் குமார் மற்றும் இளவரசன் ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோஷின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விடுகின்றனர்.

போலீஸ் வருகை
இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் போலீசார் சந்தோஷ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவு
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளவரசன் மற்றும் அருண்குமார் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் சந்தோஷ்குமார் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவியில் சந்தோஷ்குமாரின் கழுத்தை இளவரசன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கத்தியால் அறுக்கும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications