சென்னையில் கேட்ட துப்பாக்கி சத்தம்..கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விஜயகுமார் சுட்டுப் பிடிப்பு
சென்னை: சென்னை இந்திராநகர் ரயில் நிலையம் அருகே கடந்த 20 ஆம் தேதி மவுலி என்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ரவுடி விஜயகுமாரை பிடிக்க போலீஸார் முயற்சி செய்தனர். அப்போது, அவர் தப்ப முயன்றதால் ரவுடி விஜயகுமாரை போலீஸார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
சென்னை, இந்திராணி நகர் ரயில் நிலையம் அருகே நவம்பர் 20 ஆம் தேதியன்று மவுலி என்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கெளதம், நிரஞ்சன் ஆகிய இருவர் கடந்த வெள்ளியன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான ரவுடி விஜயகுமாரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், ரவுடி விஜயகுமார் குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விஜயகுமாரை கைது செய்ய முயன்றனர்.
அப்போது, விஜயகுமார் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்துள்ளார். இதையடுத்து, போலீஸார் ரவுடி விஜயகுமாரின் காலில் சுட்டுப் பிடித்தனர். காலில் காயமடைந்த ரவுடி விஜயகுமார் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகுமார் மீது 2 கொலை முயற்சி வழக்கு உள்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications