சென்னை மயிலாப்பூரில் சித்திரைக் குளம் நிரம்பியது.. வெள்ளக்காடான தெருக்கள்
சென்னை: சென்னை மயிலாப்பூரில் சித்திரைக் குளம் நிரம்பி உபரி நீர் தெருக்களுக்குள் பாய்கிறது, இதனை குடும்பம் குடும்பமாக வந்து மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர். இது ஒருபுறம் எனில் மந்தவெளியில், சாலையில் திடீர் ராட்சத பள்ளம் உருவானது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் குளம், சித்திரைக் குளம், விருபாக்சீஸ்வரர் கோயில் குளம் மற்றும் மாதவப்பெருமாள் கோயில் குளம் ஆகிய நான்கு குளங்கள் உள்ளன.
சமீபத்திய கனமழையால் இந்த நான்கு குளங்களுக்கும் நீர் வரத்து அதிகம் இருந்தது. இரண்டாவது பெரிய குளமான சித்திரை குளம் அருகில் உள்ள விஷ்ணு கோயிலுக்கு உரியதாகும்.

சித்திரைக்குளம்
கடந்த சில தினங்களாக வேகமாக நிரம்பி வந்த சித்திரைக் குளம் இன்று காலை முழுமையாக நிரம்பியது. தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் உபரிநீர் அருகிலுள்ள சித்திரைக்குளம் வடக்குத்தெரு, கேசவ பெருமாள் கோயில் தெரு ,சோலையப்பன் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்குள் புகுந்து வெள்ளக்காடாக ஆகியது.

வேடிக்கை
சித்திரைக் குளம் நிறைந்து உபரிநீர் நாலாப் பக்கம் வெளியேறியதை கேள்விப்பட்ட பொதுமக்கள் இன்று காலை முதல் குடும்பம் குடும்பமாக வந்து வேடிக்கை பார்த்தனர். நீண்ட காலத்திற்குப் பிறகு கடந்த 2015-ம் வருடத்தில் பெய்த பெருமழையில் இக்குளம் நிரம்பியது. ஆனால் அப்போது உபரிநீர் இந்த அளவு வெளியேறவில்லை.

ஆர் நட்ராஜ்
தமிழக முன்னாள் டிஜிபி யும் மயிலாப்பூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். நட்ராஜ் மழைக்காலத்தில் தெருக்கள் வாயிலாக வீணாகும் மழை நீரை இந்த நான்கு குளங்களுக்கும் கொண்டுவருவதற்கான முயற்சி எடுத்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

நிலத்தடி நீர் மட்டம்
பெரியகுளம் என்று அழைக்கப்படும் கபாலீஸ்வரர் கோயில் குளத்திலும் தண்ணீர் இல்லாமல் இருந்தது. அதுவும் கணிசமான அளவு நிரம்பியுள்ளது.
பருவமழை தொடங்கும் முன் மயிலாப்பூரில் நிலத்தடி நீர் அதல பாதாளத்தில் இருந்தது. இந்தப் பெருமழை இங்கு நிலத்தடி நீரை உச்சம் தொட வைத்துள்ளது இதனால் மயிலாப்பூர் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மந்தவெளி
மயிலாப்பூரின் பக்கத்து பகுதியான மந்தவெளியில் சாலையில் திடீர் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. மந்தைவெளியில் சாலையில் ஆர்டிஓ அலுவலகம் அருகே திடீரென பெரும் பள்ளம் ஒன்று ஏற்பட்டு தார்ச்சாலை உள்வாங்கியது. ஒரு வாகனம் மூழ்கும் அளவுக்கு ஏற்பட்ட பள்ளத்தைப்பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்ப்பாக யாரும் அந்த நேரத்தில் சாலையில் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக தடுப்பு வைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications