Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுவல்லவோ பாஜக.. தென்சென்னையில் அதிமுகவையே அடியோடு சாய்த்த "தாமரை".. சபாஷ் தமிழிசை சவுந்தரராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்சென்னை தொகுதியில் பாஜக பெற்றுள்ள வாக்குகள், தமிழக மக்களின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது. என்ன காரணம்?

திமுகவின் பாரம்பரியமான தொகுதியாக கருதப்படும் தென்சென்னையில், இந்த முறையும் தமிழச்சி தங்க பாண்டியனே களமிறங்கினார்.. அதிமுக சார்பில் ஜெயவர்த்தன், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ச்செல்வி ஆகியோரும் களம் கண்டனர்.

tamilisai soundarajan chennai south lok sabha election results chennai south constitution mp election chennai south m

அதிமுகவும், பாஜகவும் கடந்த முறை இங்கு இணைந்தே தேர்தலை சந்தித்திருந்தன.. அப்போதுகூட திமுகவின் வாக்கு வங்கியை அசைக்க முடியவில்லை.. இந்த முறை தனித்தனியாக களமிறங்கியதுமே, திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு கணிக்கப்பட்டுவிட்டது.

கணிப்புகள்: அதுமட்டுமல்ல, கடந்த முறை தேர்தலில் 1,36,645 வாக்குகளை பெற்றிருந்த மநீம, தற்போது, திமுகவுடன் இணைந்திருப்பது, கூடுதல் லாபத்தை திமுகவுக்கே பெற்று தந்துள்ளது. அதற்கேற்றவாறு, இதுவரை வெளியான அனைத்து கணிப்புகளிலுமே தென்சென்னையில் திமுகவே வெற்றி பெறும் என்ற கணிப்புகள் நிரூபணமாகி கொண்டிருக்கிறது.

2 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கிட்டத்தட்ட 80,000 வாக்குகளை பெற்று முதன்மையான இடத்தையே தக்க வைத்திருந்தார்.. பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 50,713 வாக்குகளை பெற்று 2வது இடத்தை பெற்றிருந்தார்.. அதிமுக 3வது இடத்தில், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 25,864 வாக்குகளை பெற்றிருந்தார்.

பிராமண சமூகம்: இந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தாலும், பாஜக பெற்றிருக்கும் வாக்குகள் வியப்பை தந்து வருகிறது.. பாஜகவை பொறுத்தவரை, இங்குள்ள பிராமண சமூகத்தின் வாக்குகளையே பிரதானமாக நம்பியே ஒவ்வொரு முறையும் களமிறங்கி வருகிறது.. கடந்த முறை தேர்தலில், மூத்த தலைவர் இல.கணேசன் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்ததே இதற்கு சாட்சியாகும்.

இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டியிருக்கிறது.. கடந்த 2014 எம்பி தேர்தலில், 2ம் இடத்தை பிடித்த திமுகவுக்கும், 3ம் இடத்தை பிடித்த பாஜகவுக்கும், வாக்கு வித்தியாசங்கள் வெறும் 40 ஆயிரம் வாக்குகள்தான்..

தமிழிசை ஆர்வம்: அதனால்தான், 2019-லேயே தமிழிசையே இதே தென்சென்னையில் போட்டியிட ஆசைப்பட்டார்.. இப்போதுகூட, ஆளுநர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு, இங்கு போட்டியிட காரணமே, பிராமண ஓட்டுக்கள் நிச்சயம் பாஜகவை கை தூக்கிவிடும் என்பதால்தான்.

முதலிடத்தை பெற முடியாவிட்டாலும், 2வது இடத்தை பாஜக தக்க வைத்திருக்கிறது.. அதுவும், அதிமுகவையே ஓவர்டேக் செய்து 2வது இடத்தை பெற்றிருக்கிறார் தமிழிசை சவுந்தராஜன். இத்தனைக்கும் இந்த தென்சென்னை அதிமுகவுக்கும் சாதகமான தொகுதியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.. அப்படியிருந்தும், பாஜக இங்கு முந்திக்கொண்டு வந்துள்ளது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க செய்துள்ளது. அதிமுக வேட்பாளரை விட இரு மடங்கு ஓட்டுகளை வாங்கி முன்னேறி வருகிறார் தமிழிசை சவுந்தராஜன்.

ராஜினாமா: தமிழிசை சௌந்தரராஜன் இந்த முறை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக தலைமைதான் மிகவும் தீவிரமாக இருந்தது. அதனால்தான், அவர் வகித்து வந்த தெலங்கானா மாநில ஆளுநர் பதவியையும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியையும் ராஜினாமா செய்யச் சொல்லியிருந்தது கட்சித்தலைமை.

பாஜக மாநில தலைவராக இருந்தபோதே சென்னை நகர மக்களிடம், இளைஞர்களிடம் நெருங்கிப் பழகியவர் தமிழிசை சவுந்தரராஜன்.. இதையும் கருத்தில்கொண்டுதான், பாஜக தலைமை அவருக்கு இந்த தென் சென்னை தொகுதியை வழங்கியது.

ரிஸ்க்: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழிசை இங்கு போட்டியிட வேண்டுமா? திமுகதான் வெற்றி பெற போவது என்று தெரிந்தும் எதற்காக ரிஸ்க் எடுக்கிறார்? என்கிற பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் புறந்தள்ளிவிட்டு, களத்தில் குதித்தார் தமிழிசை..

5 ஆண்டுகளுக்கு 365 நாட்கள் என்ற கணக்கில், 1825 நாட்களும் மக்கள் பணியாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் 'அக்கா 1825' என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை தமிழிசை வெளியிட்டிருந்தது தொகுதி மக்களின் கவனத்தை திருப்பியிருந்ததை மறுக்க முடியாது..

ஒவ்வொரு நாளும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு, தொகுதிக்குள் ஓடிஓடி சென்று வாக்குகளை சேகரித்து, மிக மிக குறுகிய காலத்திலேயே இவ்வளவு ஓட்டுக்களை பெற்றிருப்பது உண்மையிலேயே பெரிய விஷயம்தான்.

தடாலடியான அரசியல் பாணி இல்லாமல் மென்மையான அரசியலை முன்னெடுத்து வருபவர் தமிழிசை.. சாதி மதரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பொதுவெளியில் பகிரங்கமாக சொல்லாமல், நாகரீக அரசியலை செய்து வருபவர் தமிழிசை.. யாரையும் கடிந்துகூட பேசாத தன்மை உள்ளவர்..

கருணாநிதி: குமரியார் மகள் அரசியல் நாகரீகத்துடன் இருப்பார், மக்கள் விரோத கட்சியிலே அங்கம் வகித்தாலும் அவரது அடிப்படை குணம் ஒருபோதும் மாறாது என்று மறைந்த முதல்வர் கருணாநிதி பலமுறை தமிழிசையை பாராட்டியதையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டிடியிருக்கிறது.

இத்தனை நல்லியல்புகளும் இருப்பதால்தான், தமிழிசையால் இத்தனை வாக்குகளை பெற முடிந்திருக்கிறது என்றே நாம் உறுதியாக சொல்லலாம்.. கோடை வெயிலில் ஒவ்வொரு தெருக்களிலும் தமிழிசையின் அயராத உழைப்பை தென்சென்னை மக்களே கண்டு மலைத்துவிட்டார்கள். அதற்கான பாராட்டுக்களைதான், தங்கள் வாக்குகளாக இன்று தமிழிசைக்கு வழங்கியிருக்கிறார்கள் என்றே தெரிகிறது.
ஆக மொத்தம், தென்சென்னையில் திமுக வெற்றி பெற்றாலும்கூட, பாஜகவின் கவுரவமான தோல்வி பாராட்டத்தக்கதே.. அந்தவகையில், பலம்வாய்ந்த அதிமுக என்ற ஆலமரத்தையே, தென்சென்னையில் வேரூடன் சாய்த்துள்ளது "தாமரை"..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+