4 அன்ரிசர்வ் பெட்டி.. டெல்டா வழியே சென்னை - நெல்லை தீபாவளி சிறப்பு ரயில்! எங்கு எப்போது நிற்கும்?
சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே தீபாவளி சிறப்பு ரயில் 3 நாட்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்து உள்ள நிலையில், எந்தெந்த ரயில்கள் எந்தெந்த ஊர்களின் எந்த நேரத்தில் நிற்கும் என்ற விபரத்தை ரயில்வே வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் சென்னை போன்ற பெருநகரங்களில் பணி நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் செல்வது வழக்கம். அப்போது வாகனங்களில் கடும் கூட்ட நெரிசல் இருக்கும். போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கும். இதனை தவிர்க்க தமிழ்நாடு அரசு பண்டிகைகளுக்காக சிறப்பு பேருந்துகளும், ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்கும் ரயில்வே, சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில் சேவையை அறிவித்து உள்ளது. அதன்படி, "ரயில் எண்: 06070 TEN MS SPL நவம்பர் 9, நவம்பர் 16, நவம்பர் 23 ஆகிய 3 வியாழக்கிழமைகளில்
திருநெல்வேலியிலிருந்து மாலை 6:45 pm மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு காலை 8:30 மணிக்கு சென்றடைகிறது. ரிசர்வேஷன் இல்லாத 4 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
நிறுத்தப்படும் ரயில் நிலையங்கள்: கோவில்பட்டி - 7:35 pm, சாத்தூர் - 7:52 pm, விருதுநகர் - 8:18 pm, அருப்புக்கோட்டை - 8:43 pm, மானாமதுரை - 9:38 pm, சிவகங்கை - 10:03 pm, காரைக்குடி - 10:40 pm, அறந்தாங்கி - 11:04 pm, பேராவூரணி - 11:29 pm, பட்டுக்கோட்டை - 11:53 pm, அதிராம்பட்டினம் -12:10 am, முத்துப்பேட்டை - 12:22 am, திருத்துறைப்பூண்டி- 12:43 am, திருவாரூர் - 1:30 am, மயிலாடுதுறை - 2:43 am, சீர்காழி - 3:07 am, சிதம்பரம் - 3:23am, கடலூர் - 4:00 am, விழுப்புரம் - 5:25 am, செங்கல்பட்டு - 6:58 am, தாம்பரம் - 7:28 am
சென்னை டூ நெல்லை: மறு மார்க்கமாக சென்னையிலிருந்து ரயில் எண் : 06069 MS TEN SPL நவம்பர் 10, நவம்பர் 17, நவம்பர் 24 ஆகிய வெள்ளிக் கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 3:00 pm மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு காலை 7:10 am மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம் - 3:28 pm, செங்கல்பட்டு - 3:58 pm, விழுப்புரம் - 5:30 pm, கடலூர் - 6:35 pm, சிதம்பரம் - 7:13 pm, சீர்காழி - 7:31 pm, மயிலாடுதுறை - 8:18 pm, திருவாரூர் - 9:35 pm, திருத்துறைப்பூண்டி - 10:28 pm, முத்துப்பேட்டை - 10:39 pm, அதிராம்பட்டினம் - 10:51 pm, பட்டுக்கோட்டை - 11:13 pm, பேராவூரணி - 11:39 pm, அறந்தாங்கி - 12:09 am, காரைக்குடி - 1:05 am, சிவகங்கை - 1:43 am, மானாமதுரை - 2:18 am, அருப்புக்கோட்டை - 2:58 am, விருதுநகர் - 4:38 am, சாத்தூர் - 5:00 am, கோவில்பட்டி - 5:18 am.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications