ஓஎம்ஆர் ஹோட்டலில் சிக்கன் ரைஸ் கேட்ட விஐபி.. பாஜக PPGD சங்கரை போட்டு தள்ளியதே நான் தான்! பரபர சென்னை
சென்னை: காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பிபிஜிடி சங்கர் . வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்த சங்கர் கடந்த 2020ல் பாஜகவில் இணைந்தார். உடனடியாக இவருக்கு தமிழக பாஜக பட்டியல் அணி மாநிலப் பொருளாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த 3 வருடங்களிலேயே இவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அன்றைய தினம் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணிய நிலையில், இதுகுறித்த தகவல் ஒன்று பரபரத்து வருகிறது.
கடந்த 2023-ல் பாஜக பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஸ்ரீபெரும்புதூர் PPGD சங்கர் கொலை செய்யப்பட்டார்.. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் இந்த பிபிஜிடி சங்கர்..

42 வயதான சங்கர், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார்.
சாலையில் இறங்கி ஓடிய சங்கர்
சம்பவத்தன்று, பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது, காரை வழிமறித்த மர்ம கும்பல் காரின் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டு வீசியது.. அப்போதுதான் அந்த கும்பல், தன்னை கொலை செய்ய வந்துள்ளது என்பதை அறிந்து, காரிலிருந்து கீழே இறங்கி, உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினார்.
ஆனால் வழியெங்கும் மறைந்திருந்த மர்ம கும்பல், சங்கரை விடாமல் விரட்டி சென்று, சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.. இதில் PPGD சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இவ்வழக்கு தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கவுன்சிலர் சாந்தகுமார், ஜெகன், குணா, சரத்குமார், ஆனந்த், சாந்தகுமார், சஞ்சு, உதயகுமார், தினேஷ் ஆகிய 9 பேர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்..
பாஜக நிர்வாகி
கடந்த 2020ம் ஆண்டு நிலவரப்படி பிபிஜி சங்கர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 14 குற்ற வழக்குகள் இருந்ததாம்.. 14 வழக்குகளில் 6 வழக்குகளில் விடுதலையாகியிருக்கிறார்.. மிச்சம் 7 வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில்தான், PPGD சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.. இந்த சம்பவமானது, 2 வருடங்களுக்கு முன்பு பெரும் அதிர்வலையை தமிழகத்தில் உண்டுபண்ணியிருந்தது..
குன்றத்தூர் வைரம் என்பவரை தீர்த்து கட்ட சங்கர் திட்டமிட்டு வருவதாகவும், இந்த தகவல் வைரத்துக்கு சென்ற நிலையில்தான், இப்படியொரு படுகொலை நடந்ததாகவும் காரணங்கள் வெளியாகியிருந்தன..
பிபிடிஜி சங்கர் யார்
கொல்லப்பட்ட PPGD சங்கர் பாஜகவின் மாநில நிர்வாகி என்பதால், அப்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சட்ட ஒழுங்கை விமர்சித்து ட்வீட் ஒன்றினை பதிவிட்டிருந்தார்.. "காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்" என்று சாடினார்..
"பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் இனி இதுபோல குற்றச்சம்பவங்கள் நடைபெறாமலிருக்கவும் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மூத்த தலைவர் வானதி சீனிவாசனும் வேண்டுகோள் விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது என்ன நடந்தது தெரியுமா?
PPGD சங்கரை போட்டு தள்ளியதே நான்தான் என்று ஒருத்தர் பொதுவெளியிலேயே பகிரங்க வாக்குமூலத்தை தந்துள்ளார்..
ஒரகடம் அருகே வாரணவாசி பகுதியிலுள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த அகிலன் என்பவர் நேற்றிரவு சாப்பிட சென்றுள்ளார்.. இவர், சங்கரை கொலை செய்த A1 குற்றவாளி சாந்தகுமாரின் உறவினர் ஆவார்..
அப்போது சாப்பிடுவதற்கு சிக்கன் ரைஸ் ஆர்டர் செய்துள்ளார். அங்கிருந்த மாஸ்டர் சிக்கன் ரைஸ் தீர்ந்து விட்டது என்று சொல்லியிருக்கிறார்.. ஆனால், அங்கு சாப்பிட வந்திருந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு, சிக்கன் ரைஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது.. இதைப்பார்த்ததுமே அகிலன் டென்ஷன் ஆகிவிட்டார்..
ஸ்கெட்ச் போட்டு தூக்கியதே நான்தான்
சிக்கன் ரைஸ் சாப்பிட்டு வந்த அந்த ஊழியரிடம் சென்ற அகிலன், "நான் யார் தெரியுமா?, பிபிஜிடி சங்கரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியதே நான்தான்.. என்று சொல்லி, அந்நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.. அகிலன் ஆவேசமாக திட்டுவதுடன், சிக்கன் ரைஸ் சாப்பிட வந்தவரையும் கொடூரமா தாக்குவதை கண்டு, அங்கிருந்தவர்கள் பதறினார்கள்.. இந்த சம்பவத்தை ஓட்டலிலிருந்த நபர் ஒருவர், வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு விட்டார்.
இதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.. ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த ரவுடி அகிலன் மீது ஒரகடம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன..
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications