ஜெம் வீரமணி உள்பட 3 பேருக்கு 2 நாள் போலீஸ் காவல்.. SITக்கு அனுமதி வழங்கிய சிறப்பு நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'போக்சோ' வழக்கில் சிக்கி சிறையில் உள்ள 'ஜெம் கிரானைட்' உரிமையாளர் வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோரை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டது.

chennai-pocso-special-court-allowed-sit-2-days-of-police-custody-for-gem-veeramani-and-2-others

தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது ஏராளமான பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றன. 'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவனரான இவர் மீது கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் புகார் அளிக்கப்பட்டது.

அந்த வழக்கில் 82 வயது நிரம்பிய ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார. இவர் மீது மொத்தம் 7 போக்சோ வழக்குகள், 2004ல் சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக ஒரு வழக்கு என்று மொத்தம் 8 வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த வழக்குகளில் ஜெம் வீரமணி மட்டுமின்றி அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் இன்னும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தையே உலுக்கி உள்ள இந்த வழக்கில் இன்னும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், வழக்கை மூடி மறைக்க ஜெம் வீரமணி சார்பில் லஞ்சமாக பணம் கைமாற்றப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கை விசாரிக்க எஸ்ஐடி எனும் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் ஜெம் வீரமணி மீதான முதல் வழக்கில் கூடுதல் விசாரணை மேற்கொள்ளும் வகையில் ஜெம் வீரமணி, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் சென்னையில் உள்ள 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.

இந்த வழக்கு இன்று 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பத்மா விசாரணை மேற்கொண்டார். அப்போது ஜெம் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எஸ்ஐடி சார்பில் அனுமதி கோரப்பட்டது. அதனை நீதிபதி பத்மா ஏற்கவில்லை.

மாறாக ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன் 3 பேரையும் 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதனால் இன்று முதல் நாளை மறுநாள் வரை எஸ்ஐடி போலீசார் 3 பேரிடமும் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+