அபார்ட்மெண்டிற்குள் ஆபாச வேலை! அரைகுறை ஆடைகளுடன் பெண்கள்! புரோக்கரை தட்டித் தூக்கிய போலீஸ்! பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக ஒருவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர். தங்கள் பகுதிகளில் ஏதேனும் அசாதாரண நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர் சென்னை போலீசார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர சோதனை நடத்தி மசாஜ் சென்டர், ஸ்பா என்ற பெயர்களில் பாலியல் தொழில் நடத்தி வரும் விடுதிகளுக்கு சீல் வைத்த வருகின்றனர்.

chennai police crime

இதை அடுத்து பாலியல் தொழில் நடத்தும் கும்பல் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் வீடுகளை வாடகைக்கு பிடித்து அங்கு மது விருந்து, கஞ்சா விருந்துடன் பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கோயம்பேடு அருகே ஓய்வு பெற்ற டிஜிபியின் மகன் வீட்டை வாடகைக்கு எடுத்து ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் திருமங்கலம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-1 காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் கடந்த பிப்ரவரி 3ம் தேதி அன்று திருமங்கலம், என்.வி.என் நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மேற்படி வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய தேனாம் பேட்டை செனடாப் சாலையை சேர்ந்த தீபக் பவுடல் (29) என்பவரை கைது செய்தனர். மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட எதிரி தீபக் பவுடல் விசாரணைக்குப் பின்னர் பிப்ரவரி 4ம் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டனர்" என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தங்கள் பகுதிகளில் பாலியல் தொழில், கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத சம்பவங்கள் நடைபெற்றால் காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை அவசர உதவி எண்ணான 100க்கு அழைக்கலாம் எனவும் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் கூறியிருக்கிறார்கள். சென்னையில் கடந்த சில நாட்களாக பாலியல் தொழில் கும்பல் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+