சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

27 வயசு மினி.. தீபா ஆண்ட்டியிடம் சிக்கி.. மிரண்டு போன சென்னை போலீஸ்.. ஷாக்!

கன்னியாகுமரி பெண்ணை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர் ஒரு தம்பதி

Google Oneindia Tamil News

சென்னை: "செய்தி வாசிப்பாளர் பணிக்கு ஆட்கள் தேவை, சினிமாவில் நடிக்க ஆசையா?" என்பது போன்ற விளம்பரங்கள் வந்தால், மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் பொதுமக்களை அலர்ட் செய்துள்ளனர்.. அதற்கு காரணம் கன்னியாகுமரி பெண்ணின் வாழ்க்கையில் நடந்த இந்த தில் சம்பவம்தான்!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் மினி.. இவருக்கு 27 வயதாகிறது.. அழகான இளம்பெண்.. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று இவருக்கு தீரா ஆசை இருந்துள்ளது.

அப்படி இல்லையென்றால், செய்தி வாசிப்பாளராகவாவது மாறிவிட வேண்டும் என்று விரும்பி உள்ளார்.. எப்படியோ தன் முகத்தை இந்த உலகமே பார்க்க வேண்டும் என்ற ஆசை, கனவுகளுடன் வாழ்ந்து வந்த பெண்தான் மினி!

 ஆட்கள் தேவை

ஆட்கள் தேவை

இதற்காக பல கம்பெனிகளில் வேலை தேடி வந்தார்.. பல நிறுவனங்களை நேரில் சென்றும் அணுகினார்.. அப்படித்தான், சில வாரத்திற்கு முன்பு OLX என்ற ஆப்பில் "சினிமா வாய்ப்பிற்கு ஆட்கள் தேவை" என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார்... பிறகு அதில் இருந்த போன் நம்பருக்கு பேசினார்.. அப்போது பேசியவர்கள் சினிமா மற்றும் செய்திவாசிப்பு நிறுவனத்தில் ஆட்களை சேர்த்துவிடும் ஏஜென்சி நடத்தி வருவதாகவும், பிரபல செய்தி நிறுவனத்தில் வேலைபார்க்க ஆட்கள் தேர்வு நடைபெறுவதால், விருப்பமிருந்தால், பங்கேற்குமாறு மினியை கூப்பிட்டுள்ளனர்.

 தனியார் ஹோட்டல்

தனியார் ஹோட்டல்

ஆனால், அந்த ஆபீஸ் துரைப்பாக்கத்தில் உள்ளது.. அங்கு வர வழி தெரியாது என்று சொல்லவும், ஆபீஸ் அசிஸ்டென்ஸ் தீபக் என்பவரை அனுப்பி கன்னியாகுமரி பெண் மினியை அழைத்து வர வைத்துள்ளனர் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள்... ஒரு தனியார் ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டார் மினி.. அப்போதுதான் 2 பேர் அங்கு வந்தனர்.. ஒருவர் பெயர் பிஸ்ட்ரோ, இன்னொருவர் பெயர் தீபா.

தீபா

தீபா

இருவரும் அந்த ஏஜென்சியின் மேனேஜர்கள் என்று சொல்லி அறிமுகமானார்கள்.. இன்டர்வியூ அப்போதே நடந்தது.. பிறகு அங்கிருந்த ஒரு கேமிராவை காட்டி மேக்கப், ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதையெல்லாம் பார்த்து பரவசமான மினியும், மேக்கப் போட தயாரானர்.. அப்போது, தீபா, "மேக்கப் போடும்போது கழுத்தில் தங்க நகை எதுவும் வேணாம்" என்று சொல்லி உள்ளார்.

பாத்ரூம்

பாத்ரூம்

உடனே மினி அந்த நகையை கழற்றிவைத்துவிட்டு, முகம் கழுவ பாத்ரூமுக்குள் சென்றார்.. அப்போது தீபா & கோ, பாத்ரூமிலேயே மினியை வைத்து பூட்டி தாழ்ப்பாள் போட்டுவிட்டு, டிவியையும் சத்தமாக வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டது. இதன்பிறகுதான், மினி அதிர்ந்து போனார்.. அங்கிருந்து அவர் ஓட்டல் ஊழியர்களால் மீட்கப்பட்டு, துரைப்பாக்கம் போலீசில் புகார் தந்தார். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோதுதான், அவர்கள் 2பேரும் தம்பதி என தெரியவந்தது.

 தீபா தம்பதி

தீபா தம்பதி

பாலவாக்கம் குப்பம் பகுதியில் 2 பேருமே பதுங்கியிருந்தனர்.. இவர்கள் தேனியை சேர்ந்தவர்களாம்.. விளம்பர மோசடியில் ஈடுபட்டு பணம், நகை பறிப்பதுதான் இவர்களின் வேலையாம். இதே இதில் தீபாதான் கொஞ்சம் ஸ்பெஷல்.. 8 வருஷத்துக்கு முன்பு இவர் ஒரு போலீஸ்.. சென்னை திருவான்மியூர், நீலாங்கரை ஸ்டேஷனில் ஊர் காவல்படையில் பணிபுரிந்தவர்.. ஆனால் அந்த காசு பத்தாமல், பணம் சம்பாதிக்கும் இப்படியெல்லாம் விளம்பரம் தந்து இளம்பெண்களை குறிவைத்து வந்துள்ளார்.. தொடர்ந்து தீபா தம்பதியிடம் விசாரணை நடக்கிறது.

English summary
Chennai police arrested couple in cheating case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X