வாடகை வீடு, ரூம் முழுக்க சிம் கார்டுகள்! பிஎஸ்என்எல் நெட்வோர்க்கை ஹேக் செய்த கேரள இளைஞர்! பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் பிஎஸ்என்எல் நெட்வோர்க்கை ஹேக் செய்த கேரள இளைஞரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளூர் அழைப்புகளுக்குக் குறைந்த கட்டணமும், வெளிநாட்டு அழைப்புகளுக்கு அதிக கட்டணமும் வசூலிக்கும்.

இதனால் வெளிநாடுகளில் இருக்கும் நபர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

 அதிக கால்கள்

அதிக கால்கள்

தலைநகர் சென்னையில் கடந்த 15 நாட்களில் குறிப்பிட்ட 72 லேண்ட்லைன் இணைப்புகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் அழைப்புகள் செய்யப்பட்டுள்ளதை பிஎஸ்என்எல் அதிகாரிகள் கண்டறிந்தனர். குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக கால்கள் செய்யப்பட்டது அவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை தொலைப்பேசியின் சட்ட அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். அதன்படி சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வுகளைச் செய்தனர்.

 ஹேக்

ஹேக்

அதன்படி சென்னை ஈசிஆர் ரோடு கானத்தூர் நைனார் குப்பம் பகுதியில் இருக்கும் சிறிய வீடு ஒன்றில் அவர்கள் சோதனை செய்தனர். அங்கு அவர்கள் 7 சிம் பெட்டிகளை கண்டறிந்தனர். அந்த ஒவ்வொரு பெட்டியும் சுமார் 32 சிம் கார்டுகளை செயலாக்கும் திறனைக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நபர்கள் வாடகை வீட்டில் இருந்து கொண்டு சட்ட விரோதமாக டவரில் இருந்து சிக்னல் ஹேக் செய்து டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போன்ற ஒன்றை நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

 கேரள இளைஞர்

கேரள இளைஞர்

இதையடுத்து அங்கு இருந்த நபரைக் கைது செய்து அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 35 வயது நாபல் என்பது தெரிய வந்தது. நைனார் குப்பம் பகுதியில் வாடகை வீடு ஒன்று எடுத்து இதுபோன்ற மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளார். இவர்கள் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ போன்ற டெலிகாம் நிறுவனங்களை ஏமாற்றி அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது.

 பதிவாகாது

பதிவாகாது

போலி முகவரி சான்றிதழ்களை வைத்து மொத்தம் 224 சிம் கார்டுகளை வாங்கி உள்ள இவர்கள், அதனை பிரத்தியேக கருவிகளில் இணைத்து, வாடிக்கையாளர்களுக்கு நெட்வொர்க்கை உருவாக்கி அவர்களுக்கு ஒரு பிரத்தியேக மொபைல் எண்ணைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நெட்வொர்க்கில் பதிவு செய்துள்ளனர். இதனால் அந்த குறிப்பிட்ட எண்ணில் பேசுபவர்கள் யாரிடம் பேசுகிறார்கள் என்ற தகவல் பதிவாகாது. இதற்காக அவர் பிஸ்என்எல் நெட்வோர்க்கை ஹேக் செய்துள்ளார்.

 வருமான இழப்பு

வருமான இழப்பு

இதன் மூலம் வெளிநாட்டு அழைப்புகளை வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் மூலம் உள்ளூர் அழைப்புகளாக மாற்றி உள்ளனர். இதன் மூலம் டெலிகாம் நிறுவனங்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள நாபல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், கேரளாவில் இருந்து இந்த நெட்வொர்க்கை இயக்கி வரும் முக்கிய குற்றவாளியான அனீஸ் உள்ளிட்ட இருவரைத் தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 நாச வேலைகள்

நாச வேலைகள்

மேலும், வெளிநாடு அழைப்புகளை டிராக் செய்ய முடியாத தொழில்நுட்பத்தை இவர்கள் உருவாக்கி உள்ளதால், அதை நாச வேலைக்குத் திட்டமிட்ட ஏதேனும் பயன்படுத்தினாரே என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடியில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+