லிப்ட்டில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. நீண்ட போராட்டத்துக்கு பிறகு எஸ்ஆர்எம் பல்கலை ஊழியர் கைது
Recommended Video

சென்னை: சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஊழியர் ஒருவர் விடுதி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ளது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம். இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரியில் இருபாலருக்கும் தனித்தனி விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் கல்லூரி லிப்டில் வந்தார். அப்போது அவருடன் கல்லூரி கேன்டீனில் பணியாற்றும் ஊழியர் அர்ஜுனும் (26) வந்தார்.

அருவருக்கத்தக்க..
லிப்டில் யாரும் இல்லாத நேரத்தில் அர்ஜுன் தனது ஆடையை களைந்து மாணவி முன்பு அருவருக்கத்தக்க செயலை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, கூச்சலிட்டுள்ளார்.

தப்பியோட்டம்
இதனால் அச்சமடைந்த அர்ஜுன் லிப்ட்டை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து விடுதி வார்டனிடம் அந்த மாணவி புகார் கொடுத்தார். அதற்கு வார்டனோ ஒழுக்கமான உடைகளை அணியாததால்தான் அந்த ஊழியர் அப்படி நடந்து கொண்டதாக அதிர்ச்சி அளிக்கும் பதிலை தெரிவித்தார்.

மாணவர்கள் போராட்டம்
அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் வடஇந்திய மாணவிகளுக்கு மட்டுமே நடக்கிறது என்றும் வார்டன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை 3 மணிக்கு நடந்தது. தகவலறிந்த மாணவர்கள் இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சக மாணவர்
அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த மாணவி, அந்த ஊழியரை அடையாளம் காட்டினார். எனினும் இந்த விவகாரத்தில் மாணவியை அமைதி காக்குமாறு நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.

உரிய நடவடிக்கை
இதுகுறித்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்தீப் சந்ஷேட்டி கூறுகையில் மாணவியின் புகார் குறித்து நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் கூறுவது தவறு என்று தெரிவித்தார்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications