திருமண மோசடி புகாரில் கைதாகிறாரா ’நாம் தமிழர்’ சீமான்? நடிகை விஜயலட்சுமியிடம் போலீஸ் தீவிர விசாரணை!
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமணம் செய்து ஏமாற்றியதாக மோசடி புகார் கொடுத்தது குறித்து நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை விஜயலட்சுமி, தமக்கும் சீமானுக்கும் 2008-ம் ஆண்டு மதுரையில் திருமணம் நடைபெற்றது; மதுரை ஹோட்டலில் பெற்றோர் ஆசீர்வாதத்துடன் சாந்தி முகூர்த்தம் நடந்தது; பின்னர் 7 முறை சீமான் நெருக்கடி கொடுத்து கருக்கலைப்பு செய்தார். பணம், நகைகளை பறித்து சென்றார். குடிபோதையில் பணம் கேட்டு சித்ரவதை செய்தார் பின்னர் கயல்விழியை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டார் என பக்கம் பக்கமாக சென்னை போலீசில் 2 நாட்களுக்கு முன்னர் புகார் மனு கொடுத்துள்ளார்.

தற்போது இந்த புகார் மனுவை சென்னை போலீசார் விசாரிக்க தொடங்கி உள்ளனர். சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் கோயம்பேடு காவல் மாவட்ட அதிகாரி உமையாள், நடிகை விஜயலட்சுமியை வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சென்னை போலீசில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், 2008-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக சீமானும் நானும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம். அப்போது தாம் பெரியாரிஸ்ட், கிறிஸ்தவர் என்பதால் மாங்கல்யம் அணிவிக்க முடியாது; மாலை மட்டும் மாற்றிக் கொள்வோம். அதுவே திருமண அடையாளம் என்றார்.
மதுரையில் மாலை மாற்றி திருமணம் செய்த போது இப்போதைக்கு இதனை வெளியே தெரிவிக்க வேண்டாம்; தலைவர் பிரபாகரன் முன்னிலையில் உலகம் அறிய பிரம்மாண்டமான திருமணம் நடத்துவோம் என வாக்குறுதி அளித்தார் சீமான். சீமான் என்னுடன் இருந்த தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை ஊடகங்களிடம் கொடுத்திருக்கிறேன். நானும் சீமானும் கணவன் - மனைவி என்பதற்கு இவைதான் ஆதாரங்கள். சீமான் எனக்கு ரூ.1 கோடி கொடுக்கவில்லை. எனக்கு சீமான் தரப்பில் இருந்து ரூ.3.5 லட்சம் மட்டுமே தந்துள்ளனர். அதற்கான ஆதாரம் இருக்கிறது.
சீமான் பிரபாகரன் பெயரை உச்சரித்துக் கொண்டு திமிர்த்தனமாக பேசுகிறார். பிரபாகரனின் பெயரை இழிவுபடுத்துகிறார். எனக்கு தெரியாமல் 7 முறை கருக்கலைப்பு மாத்திரை கொடுத்தவர் சீமான். என் அனுமதியில்லாமல் கருவை சிதைத்தவர் சீமான். என்னை தற்கொலைக்குத் தூண்டியவர் சீமான். நான் பணத்துக்காக செய்கிற நபர் என்றெல்லாம் சொல்ல வேண்டாம். என்னை கேவலப்படுத்திவிடாதீர்கள். நான் பலமுறை செத்துவிடலாம் என நினைத்திருக்கிறேன். சீமான் தூண்டுதலில் மதுரை செல்வம் என்னை பற்றி இழிவாக, தவறாக பல செய்திகளைப் பரப்புகிறார். மதுரை செல்வத்தால் என் உயிருக்கு ஆபத்து. எனக்கு பாதுகாப்பு தர வேண்டும். சீமான் இரக்கமற்ற மனிதர். அவருடைய மனைவியான என்னையே மோசமான நபராக சித்தரிக்கிறார் என கூறியிருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications