அறிவுரை சொல்லியாச்சு.. இனி அதிரடிதான்.. "ஆயுதம் எடுத்தால்.." - சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை!
சென்னை : கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வருகிறோம். அதையும் மீறி மாணவர்கள் ஆயுதங்களை எடுத்தால் கைது செய்து சிறையில் அடைப்போம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20% சதவீதம் மரணங்கள் குறைந்துள்ளது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
குற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மாவா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுத்து அதனை பறிமுதல் செய்து வருகிறோம் என சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில், மீண்டும் 'ரூட்டு தல' மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் கமிஷனர்
இந்நிலையில், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து வார்டன் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

முதல்வர் உத்தரவின்படி கமிட்டி
மேலும் பேசியஅவர், "சென்னையில் 104 இடங்களில் அதிக விபத்துகள் நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் விபத்துகளை குறைக்க விபத்து குறித்து போக்குவரத்து போலீசார், சென்னை மாநகராட்சி, சென்னனை ஐஐடி இணைந்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து அதன்பின் அந்த பகுதியில் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. விபத்துகளைக் குறைக்க தமிழக முதல்வரின் உத்தரவுப்படி தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொலைகள் குறைந்துள்ளது
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக வெளியான தகவலுக்கு பதில் அளித்த சங்கர் ஜிவால், "உலகில் குற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்று தான் வருகிறது. குற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னையில் 20% கொலைகள் குறைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

ஆயுதங்களை எடுத்தால்
மேலும், மாவா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுத்து அதனை பறிமுதல் செய்து வருகிறோம். வன்முறையில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வருகிறோம். அதையும் மீறி மாணவர்கள் ஆயுதங்களை எடுத்தால் அவர்களை கைது செய்து சிறைக்கு அனுப்புவோம்" என எச்சரிக்கை விடுத்தார்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications