ஒரு குற்றம் கூட நடக்கவில்லை.. சென்னையில் உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு! பெருநகர காவல்துறை பெருமிதம்
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல்துறையினரின் 2026 புத்தாண்டு தினத்தை ஒட்டி தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளினால் உயிரிழப்பு மற்றும் குற்றங்கள் நடவாத புத்தாண்டு தினமாக அமைந்துள்ளது என சென்னை பெருநகர சென்னை காவல்துறை கூறியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்," 2026ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமலும், விபத்தில்லாமலும், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவிட்டார்.

அதன் பேரில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) என மொத்தம் 19,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பல்வேறு இடங்களில் வாகன தணிக்கைகள், போக்குவரத்து சீர் செய்தல், கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரு வழி பாதை அமைத்தும், விபத்தில்லாமல் கொண்டாடுவதற்காக மேம்பாலங்களில் இரவு நேரங்களில் மூடப்பட்டும், கடற்கரை பகுதிகளில் நீரில் பொதுமக்கள் இறங்காமல் இருக்க தடுப்புகள் அமைத்தும், காவல் உதவி மையங்கள், கூடாரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
நேற்று (31.12.2025) சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் அயராது மேற்கொண்ட சிறப்பான பணியால் 2026-ம் புத்தாண்டு கொண்டாட்டம், சென்னை பெருநகரில், அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும், உயிர் இழப்புகள் இல்லாமலும், விபத்துகள் தவிர்க்கப்பட்டும், குற்றங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடவாமல் கொண்டாடப்பட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், நேற்று (31.12.2025) சென்னை பெருநகரில் சிறப்பாக பணிகள் மேற்கொண்ட, காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை பாராட்டி, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்" என கூறப்பட்டுள்ளது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications