அண்ணா நகர் ரவுண்டானாவுல யாருப்பா அது.. சென்னை போலீசிடம் போட்டுக்கொடுத்து..என்ன ஒரு வில்லத்தனம்
சென்னை: அண்ணா நகர் ரவுண்டானாவில் தலைக்கவசம் அணியாமல் சிக்னலுக்காக நின்ற ஜோடிக்கு அபாரதம் விதித்துள்ளது சென்னை போக்குவரத்து போலீஸ். நெட்டிசன் ஒருவர் ஆன்ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது சென்னை போலீஸ்.. பின்னால் வாகனத்தில் சென்ற ஒருவர் , புகைப்படம் எடுத்து போலீசிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.
முன்பெல்லாம் ஹெல்மெட் போடாமல் பல இடங்களில் சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். போலீஸ் இல்லை என்றால் யார் பிடிக்க போகிறார்கள் என்று பெரும்பாலும் ஹெல்மெட் போடமாட்டார்கள். போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் பகுதிகளில் மட்டும் தான் ஹெல்மெட்டுடன் சுற்றுவார்கள். மற்ற நேரங்களில கழட்டி பைக்கின் முன் பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள். இதுதான் சென்னையில் முன்பு நடந்து வந்தது.

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவார்கள். கார்களில் மறந்தும் சீட் பெல்ட் போட மாட்டார்கள்.அரை கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சிக்னல் இருந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒருவழி பாதையில் சென்று அசால்ட்டாக அபாயகரமாக சாலையை கடந்து போவார்கள். சிக்னலில் போலீஸ் இல்லை என்றால் சுத்தமாக மதிக்காமல் அப்படியே ஏறி செல்வார்கள். இப்படித்தான் சென்னையில் நீண்ட காலமாக இருந்தது.
ஆனால் சென்னை போக்குவரத்து போலீசார் கடந்த 5 மாதங்களாக எடுத்த அதிரடி ஆக்ஷனால் மக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு பயப்படும் நிலை வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆபத்தான டிரைவிங், சிக்னலை மதிக்காமல் செல்வது, சிக்னலில் கோட்டை தாண்டி நிற்பவர்கள், படிக்கவே முடியாத அளவிற்கு நம்பர் பிளேட் வைத்துள்ளவர்கள், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், செல்போனில் பேசிய படி செல்பவர்கள் என சென்னையில் பலருக்கும் அபராதம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இது தினசரி நடப்பது, இதுதவிர சென்னையை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞயிறுகளில் குடித்துவிட்டு சர்வ சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால் சனி மற்றும் ஞாயிறுகளில் தான் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்துவார்கள். எனவே ஒருவேளை போலீசிடம் மாட்டினால் அன்றே அவர்கள் வண்டிக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இது சென்னையில் சர்வ சாதாரணமாக வார இறுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
போக்குவரத்து போலீசாரின் சோதனையில் மட்டுமல்ல.. பொதுமக்களின் சோதனையில் அபராதம் விதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தாங்கள் பார்க்கும் இடத்தில் போக்குவரத்து விதிமீறலில் யாரேனும் ஈடுபட்டிருப்பதை பார்த்தால் உடனே போட்டோ எடுத்து அல்லது வீடியோ எடுத்து சென்னை மாநகராட்சி போக்குவரத்து போலீசாரை ட்விட்டரில் டேக் செய்யலாம். அப்படி செய்தால் யாராக இருந்தாலும் உடனே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதை பார்த்த பலரும் சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகார் அளித்து வருகிறார்கள். அப்படி அளித்த பலருக்கும் சென்னை மாநகர போலீசார் பதில் அளித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். போலீஸ் தொடங்கி அரசியல்வாதிகள் வரை பலரும் சிக்கி உள்ளார்கள்.
நம்பர் பிளேட் தெரியும் வகையில் வாகனத்தின் புகைப்படம், புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் நேரத்தை சொனனால் போதும், சிசிடிவியை ஆராய்ந்து உடனே சென்னை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தினமும் ஏராளமானோருக்கு இப்படி போக்குவரத்து விதிமீறலுக்காக போலீசார் அபராதம் விதித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்து தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் புகார்கள் அளித்து வருகிறார்கள். அப்படி அளிக்கும்புகார்களில் நேரம், இடம் குறித்து தகவல்கள் இருப்பதில்லை. இதையடுத்து சென்னை பெருநகர காவல் ட்விட்டர் பக்கத்தில் முதல்முறையாக பதிவிடுவோர் இடம் மற்றும் நேரம் குறித்து தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர். அப்படி அறிவித்த பின்னர் ஏராளாமானோர் கொத்தாக மாட்டிக்கொள்கிறார்கள்.
சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவரும் சரி, பின்னால் அமர்ந்து செல்பவரும் சரி, கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். தலைக்கவசம் அணியாமல் சென்றால் அவர்களுக்கு தலா 500 ரூபாய் அபாரதம் விதிக்கப்படும். அதாவது ஒரே வாகனத்திற்கு 1000 ரூபாய் அபராதத்தை போலீசார் விதிப்பார்கள். சென்னையை சேர்ந்த பலர் வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் செல்வோரை போட்டோ எடுத்து போலீசிடம் சிக்க வைத்து வருகிறார்கள். அவர்களுக்கு 500 முதல் 1000 வரை தவறுகளுக்கு ஏற்ப அபாதத்தை போலீசார் விதிக்கிறார்கள்.
அப்படித்தான் சென்னை அண்ணா நகர் ரவுண்டானாவில் அழகான பெண்ணுடன் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அவர்கள் இருவருமே தலை கவசம் அணியவில்லை. பின்னால் சிக்னலுக்காக காத்துக்கொண்டிருந்த நபர், திடீரென அவர்களை புகைப்படம் எடுத்து போலீசாரிடம் இருவருமே தலை கவசம் அணியவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து அவர்களுக்கு 1000 ரூபாப் அபராதத்தை போலீசார் விதித்தனர். இது தொடர்பாக போலீசார் பதிலும் அளித்துள்ளனர்.
அதேநேரத்தில் புகைப்படம் எடுத்த நபர் அந்த இளம் ஜோடியை மட்டும் குறிவைத்து மாட்டிவிட்டதாக நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள். அவர் பக்கத்திலேயே ஒருவர் ஹெல்மெட் அணியாமல இருக்கிறார். அவரை மாட்டிவிடாமல் இளம் ஜோடியை மட்டும் மாட்டிவிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள். நெட்டிசன்கள் அந்த குறிப்பிட்ட நபரின் லைசன்ஸ்ஸை ரத்து செய்ய வேண்டும் என்றும். வாகனம் ஒட்டியபடி செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும் கொந்தளிக்கிறார்கள். ஆன்லைன் அபராத முறையால் சென்னையில் பலரும் சிக்கி வருகிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications