நான் போலீஸ்.. பணத்தை எடு.. ரூ.1.40 கோடியை வழிப்பறி செய்த பலே கொள்ளையன்..ரூ.70 லட்சத்தை மீட்ட போலீஸ்
சென்னை சவுகார்பேட்டையில் போலீஸ் என கூறி ரூ.1 கோடியே 40 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கொள்ளையனிடம் இருந்து ரூ.70 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை: போலீஸ் எனக்கூறி ஒன்றரை கோடி ரூபாய் வழிப்பறி செய்த கொள்ளையனை கைது செய்த போலீசார் 70 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். வழிப்பறியில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் இம்ரான் என தெரிய வந்துள்ளதாக தனிப்படை போலீசார் கூறியுள்ளார். சிசிடிவி கட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்த்தப்பட்டதில் கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை சௌகார்பேட்டையில் நகைகள் மொத்தமாக வாங்குவதற்கு வெளிமாநில வியபாரிகள் வருவது வழக்கமான ஒன்று. அப்படி தான் வழக்கமாக ஆந்திராவில் இருந்து வரும் சுப்பாராவ் எனும் நகை வியாபாரி அண்மையில், தனது மேலாளர் ரகுமான் என்பவருடன் நகை வாங்க சென்னை வந்துள்ளார் .
சென்னை, சவுகார்பேட்டையில் நகை வாங்க 1 கோடியே 40 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு சுப்பாராவ் மற்றும் ரகுமான் வந்துள்ளனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்ம கும்பல், தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவர்களிடம் இருந்த 1 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை அவர்கள் கைப்பற்றியுள்ளார். அவர்கள் சென்ற பிறகு தான் இது வழிப்பறி சம்பவம், காவலர்கள் என பொய் கூறி தங்களை ஒரு கும்பல் ஏமாற்றியுள்ளனர் என்பது சுப்பாராவ் மற்றும் ரகுமான் ஆகியோருக்கு தெரிந்துள்ளது.

உடனடியாக, இருவரும் யானைக்கவுனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை வைத்து இணை ஆணையர் ரம்யா பாரதி உத்தரவின் பெயரில் யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் வழிப்பறியில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் இம்ரான் என தெரிய வந்துள்ளதாக தனிப்படை போலீசார் கூறியுள்ளார். சிசிடிவி கட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தப்பட்டதில் கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து பணத்தை கொள்ளையடித்ததை இம்ரான் ஒப்புக்கொண்டான். கொள்ளையனிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இம்ரானுடன் கூட்டு சேர்ந்து வழிப்பறி செய்த கொள்ளையன் குறித்தும் மீதி பணத்தை எங்கு பதுக்கி வைத்து உள்ளனர் என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications