அடுத்த 7 நாள்.. மாறுதே.. திநகர் போறீங்களா.. சென்னை மாநகர போலீஸ் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை அண்ணாசாலையில் தெற்கு உஸ்மான் மேம்பாலம் முதல் சிஐடி 1வது மெயின் ரோடு வரையிலான இணைப்பு மேம்பாலம் கட்டும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. எனவே 07.07.2023 (இன்று) முதல் 13.07.2023 வரை (ஒரு வாரம்) தெற்கு உஸ்மான் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து சி.ஐ.டி 1வது மெயின் ரோடு வரை இணைப்பு மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள உள்ள நிலையில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ள சாலைகள் பின்வருமாறு: அண்ணாசாலையில் இருந்து வரும் எம்.டி.சி பேருந்துகள் மற்றும் வாகனங்கள் தியாகராய நகர் மேட்லி சந்திப்பு செல்ல கண்ணம்மாபேட்டை சந்திப்பில் இடது புறமாக திரும்பி நியூ போக் சாலை சென்று முத்துரங்கன் சாலை வழியாக வலது புறமாக திரும்பி முத்துரங்கன் சாலை மேட்லி சந்திப்பில் வலது புறமாக திரும்பி தியாகராய நகர் பஸ் நிலையம் அடையலாம்.
போத்தீஸ் மேம்பாலத்தில் இருந்து உஸ்மான் சாலை வரும் எம்.டி.சி பேருந்துகள் (47,47A சைதாப்பேட்டை செல்லும் பேருந்துகள்) இடதுபுறம் சென்று பர்கிட் ரோடு வழியாகவும் மற்றும் தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து அவுட் கேட் வழியாக வரும் எம்.டி.சி பேருந்துகள் அண்ணாசாலை செல்வதற்கு மேட்லி சந்திப்பில் வலது புறமாக திரும்பி பர்கிட் ரோடு வழியாக மூப்பாரப்பன் சந்திப்பில் வலது புறமாக திரும்பி சி.ஐ.டி நகர் ரவுண்டானா அடைந்து இணைப்பு சாலை வழியாகவும் அல்லது 5வது மெயின் ரோடு வழியாகவும் அண்ணாசாலையை அடையலாம்.
மேட்லி சந்திப்பில் இருந்து மூப்பாரப்பன் சாலை வரை பர்கிட் ரோடு ஒருவழி சாலையாக மாற்றப்படுகிறது. போத்தீஸ் மேம்பாலத்திலிருந்து உஸ்மான் சாலை வரும் இலகுரக வாகனங்கள் மேட்லி சந்திப்பில் வலது புறமாக திரும்பி மேட்லி சுரங்கப்பாதை வழியாக மேற்கு மாம்பலம் மற்றும் மேற்கு சைதாப்பேட்டையை அடையலாம்.
Greater Chennai Corporation is undertaking construction work of link flyover from South Usman Flyover to CIT 1st Main Road on Anna Salai
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) July 7, 2023
Traffic changes from 07.07.2023 to 13.07.2023 (One Week) at South Usman Road and surrounding areas, on trial. #ChennaiTraffic pic.twitter.com/3buL46aXbU
ஜெ.ஒய்.எம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் தண்டபாணி தெருவில் இடது புறமாக திரும்பி மூப்பாரன் சாலை வழியாக அண்ணாசாலை சிஐடி நகர் அடையலாம்.
வெங்கட்நாராயண சாலையில் இருந்து தி.நகர் செல்லும் வாகனங்கள் பர்கிட் ரோடு மூப்பாரப்பன் சந்திப்பில் இடது புறம் திரும்பி மோசா தெரு வழியாக தியாகராய நகர் அடையலாம்." இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications