ஜெம் வீரமணி உதவியாளர் கணேசன் செல்போனில் சிறுமியின் ஆபாச வீடியோ! போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் வீரமணி, சிறுமியிடம் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோவை அவரது உதவியாளர் கணேசன் செல்போனில் வைத்திருந்த நிலையில் அதை போலீஸுக்கு தெரிவிக்காததால் அவர் கைது செய்யப்பட்டார் என காவல் துறை விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரது உதவியாளர் கணேசன் கைது செய்யப்பட்டார். இதனால் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

gem veeramani

கணேசனுக்கு சிறுமியின் ஆபாச வீடியோவை அனுப்பியது யார்? என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஜெம் வீரமணியுடன் 23 ஆண்டுகள் கணேசன் உதவியாளராக பணிபுரிந்து வந்தாராம்.

அவரது செல்போனில் சிறுமியிடம் வீரமணி பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ இருந்தும் அதை போலீஸிடம் ஏன் சொல்லவில்லை என கேட்டு அவரை கைது செய்ததாக போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

நடந்தது என்ன?

சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள பாலியல் தடுப்பு பிரிவு ஆய்வாளரை தொடர்பு கொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்தார்.

அதில் அடையாளம் தெரியாது நபர் ஒருவர் தனது அலுவலகத்திற்கு வந்து பென்டிரைவ் ஒன்றை கொடுத்ததாகவும் அதில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படும் காட்சிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

13 வயது சிறுமி

அந்த வீடியோவை ஆய்வு செய்த போது வயதானவர் ஒருவர் 13 வயது மதிக்கத்ததக்க சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சி இருந்தது.

இதன் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

வீடியோவில் இடம் பெற்றிருந்த அந்த முதியவர், பிரபல கிரானைட் தொழிலதிபரும் ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி (84) என்பது தெரியவந்தது.

வாடகைக்கு வீடு எடுத்து அட்டூழியம்

மேலும் வீரமணி தேனாம்பேட்டை பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாக பொறுப்புகளை சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கனிடம் ஒப்புடைத்திருந்தார். அந்த வீட்டிற்குள் சிறுமிகள் அழைத்து வரப்பட்டு பாலியல் குற்றங்கள் நடைபெற்றதாகவும் மேலும் சில தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு சிறுமிகளை அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

3 பேர் கைது

வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து சில புகைப்படங்கள், ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து வீரமணி, சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகிய 3 பேரும் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் 4ஆவதாக வீரமணியிடம் உதவியாளராக பணிபுரிந்த கணேசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவரது செல்போனில் வீரமணி சிறுமிகளிடம் அத்துமீறும் வீடியோ இருக்கிறது. அதுகுறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் தினமும் ஒரு பூதம் கிளம்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+